ஒசூரில் தனியார் காப்பகத்தில் படித்த 9 வயது சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் தாளாலர் இரண்டு பெண்கள் உட்பட 5 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
ஒசூர் அருகே திண்ணூர் எனும் இடத்தில் “பெசோ” என்ற பெயரில் தனியார் குழந்தைகள் காப்பகம் கடந்த 33 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அந்த காப்பகத்தைத் திருநெல்வேலியைச் சேர்ந்த சாம் கணேஷ் என்பவர் நிர்வகித்து வந்துள்ளார். இந்த காப்பகத்தில் ஆண் – பெண் என சுமார் 33 குழந்தைகள் தங்கி படித்து வருகின்றனர். காப்பக வளாகத்திற்குள் இயங்கும் காப்பகத்தின் பள்ளியில் ஃபிரிகேஜ் முதல் 5ஆம் வகுப்பு வரையிலும் கல்வி கற்பிக்கப்படுகிறது. காப்பக தாளாளரின் மனைவி ஜோஸ்பின் என்பவரும் இந்த காப்பக பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் பள்ளியில் பயிலும் 9 வயது சிறுமிக்கு காப்பக நிர்வாகியும், பள்ளி தாளாளருமான சாம் கணேஷ் தொடர்ந்து பல மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சித்ரவதைகளை பொறுக்க முடியாத அந்த குழந்தை தனது தாயாரிடம் கூறி கதறி அழுதுள்ளார். தான் மக்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமையை அறிந்து அதிர்ந்து போன சிறுமியின் தாயார் இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், காப்பக தாளாளர் சாம் கணேஷ், பல மாதங்களாக சிறுமிக்கு கடும் பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரிய வந்துள்ளது. உடனே சாம் கணேஷை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் இந்த பாலியல் குற்றத்தில் தாளாளருக்கு அவரது மனைவியும் மற்ற ஆசிரியர்களும் உடந்த்யையாக இருந்தது தெரியவந்ததை அடுத்து அதிந்து போன போலீசார், தாளாளருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது மனைவி ஜோஸ்பின், ஆசிரியை இந்திரா, மற்றும் செல்வராஜ், முரளி உட்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
தாளாளரைக் வழக்கில் இருந்து காப்பாற்ற அவருடன் இருந்த ஆசிரியர்கள் முயன்றுள்ளனர். இதையடுத்து, 5 பேர் மீதும், போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். காப்பகத்தில் பயின்ற மற்ற மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டிருக்கிறதா.? என்பது குறித்தும் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.
9 வயது சிறுமிக்கு காப்பக தாளாளர் பாலியல் தொல்லை கொடுத்ததும், அவருக்கு ஆதரவாக ஆசிரியையான மனைவியும், மற்ற ஆசிரியர்களும் உடந்தையாக இருந்த விவகாரம் ஓசூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related posts
Click to comment