இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் மீட்டுத்தர வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டு, கடந்த 11 நாட்களாக, தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் 600 கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
போராட்டத்தின் போது. ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் கடந்த 19 ம் தேதி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது மீன்வளத் துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின் மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டனர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று வாபஸ் பெற்றனர். 12 நாட்களாக இரமேஸ்வரம் மீனவர்கள் நடத்தி வந்த காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட்டு மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.
Related posts
Click to comment