‘’பெண்குலத்திற்கே பெருமை சேர்க்கிற மகளிர் மாநாடு’’ – ஊடகத்தினரை அழைத்த டாக்டர் ராமதாஸ்


தற்போது, பா.ம.க ராமதாஸ் தலைமையில் நாளை பூம்புகாரில் ‘’வன்னியர் சங்க மகளிர் மாநாடு’’ நடைபெறவுள்ளது. மகளிர் மாநாட்டில் பங்கேற்க இன்று தைலாபுரம் இல்லத்தில் இருந்து பூம்புகாருக்கு கார் மூலமாக புறபட்டுச் சென்றார்.
ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இருவருக்கும் கட்சிக்குள் மோதல் வெடித்த நிலையில், பாமக பொதுக்குழுவை மாமல்லபுரத்தில் கூட்டுவதாக அன்புமணி ராமதாஸ் அறிவித்தார். இந்நிலையில், இந்த பொதுக்குழுவிற்கு தடைகோரிய, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, கட்சியின் பொதுக்குழுவை இன்று (சனிக்கிழமை) மாமல்லபுரத்தில் அன்புமணி ராமதாஸ் கூட்டினார். திட்டமிட்டபடி அன்புமணி தலைமையில் பொதுக்குழு நடைபெற்றது.
தற்போது, பா.ம.க ராமதாஸ் தலைமையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பூம்புகாரில் ‘’வன்னியர் சங்க மகளிர் மாநாடு’’ நடைபெறவுள்ளது. மகளிர் மாநாட்டில் ராமதாஸ் பங்கேற்க உள்ளதால், இன்று தைலாபுரம் இல்லத்தில் இருந்து பூம்புகாருக்கு கார் மூலமாக புறபட்டுச் சென்றார்.
மருத்துவர் ராமதாசுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாநாட்டிற்கு செல்வதால், அவசர சிகிச்சையளிக்கும் வகையில் தனியார் மருத்துவமனையை அதிநவீன மருத்துவ வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் உடன் செல்கிறது. ராமதாசுடன் அவரது மனைவி சரஸ்வதி. மூத்த மகள் காந்திமதி ஆகியோர் உடன் சென்றனர்.
பூம்புகாருக்கு செல்வதற்கு முன்பாக ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அன்புமணி நடத்திய பொதுக்குழு குறித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, பதிலளித்த ராமதாஸ், ஊடக நண்பர்கள் மற்றும் அனைவரும் மகளிர் மாநாட்டில் பங்கேற்க வேண்டுமென அன்போடு அழைப்பதாகவும், பெண்குலத்திற்கே பெருமை சேர்க்கிற மாநாடு என்றும், இதற்குமேல் “சொல்வதற்கு வேறொன்றும் இல்லை” என்று பதிலளித்து சென்றார்.


banner

Related posts

கொலை பண்ண சொன்னாங்க.. கொலை செஞ்சேன்..காரணம் தெரியாது.. கூலிப்படை குற்றவாளி பகீர் வாக்குமூலம்.

Admin

கலைஞர் பல்கலை. மசோதா.. குடியரசுத்தலைவருக்கு அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி

Ambalam News

நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கு : சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு…

Admin

Leave a Comment