கொலை பண்ண சொன்னாங்க.. கொலை செஞ்சேன்..காரணம் தெரியாது.. கூலிப்படை குற்றவாளி பகீர் வாக்குமூலம்.


கொலை பண்ண சொன்னாங்க..

கொலை செஞ்சேன்..காரணம் தெரியாது.. கூலிப்படை குற்றவாளி பகீர் வாக்குமூலம்.

தமிழகத்தில் கூலிப்படை கலாச்சாரத்தை ஒழிக்க முடியாது என்பதை அவ்வப்போது கூலிப்படையினரால் நடத்தப்படும் கொடூர கொலைகள் நிரூபித்து வருகிறது.

கூலிப்படையால் பணத்திற்காக நடத்தப்படும் இது போன்ற கொலை சம்பவங்களின் போதும் சமூக ஆர்வலர்கள் குற்றவாளிகளை இரும்புகரம் கொண்டு அடக்கவேண்டும் என்று கருத்து தெரிவிப்பதும், அரசு இயந்திரம் தடாலடியாக நடவடிக்கை எடுப்பதும் வழக்கமாகி விட்டது. ஆனால் அரசு இயந்திரத்தால் கூலிப்படை கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை. தமிழகத்தில் கூலிப்படையினரின் அட்டகாசங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு அருகே உள்ள லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 63 வயதான சுவாமிதாஸ் என்பவர் நடுரோட்டில் வைத்து மர்ம நபர்களால் வெட்டிக்கொள்ளப்பட்டார். குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் நாகர்கோவிலில் உள்ள நீதிமன்றத்தில் புதூர் பகுதி சேர்ந்த 33 வயதான ஸ்டாலின் என்பவர் சரணடைந்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு அருகே உள்ள லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 63 வயதான சுவாமிதாஸ்க்கு திருமணமாகி கவிதா என்ற மனைவியும், ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். சுவாமிதாஸுக்கு அவரது மனைவி கவிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மனைவி மற்றும் மகன் மகளை பிரிந்து இராஜாக்கமங்கலம் அருகே ஆறுதங்கன்விளையில் உள்ள தனது சகோதரியின் வீட்டில் தங்கி வசித்து வந்திருக்கிறார். 

சுவாமிதாஸ் தங்கையின் கணவர் மளிகை கடை நடத்தி வருகிறார். அந்த கடையில் தங்கை கணவருக்கு உதவியாக சுவாமிதாஸ் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜூலை 21 ஆம் தேதி இரவு சுவாமிதாஸ் கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்று  கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் சுவாமிதாஸை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளனர். சுவாமிதாஸின் பயங்கர அலறல் சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வரும் முன்னரே சுவாமிதாஸ் இறந்துவிட்டார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சுவாமிதாஸின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்துள்ளனர். இந்நிலையில், நாகர்கோவிலில் உள்ள  நீதிமன்றத்தில் புதூர் பகுதி சேர்ந்த 33 வயதான ஸ்டாலின் என்பவர் சரணடைந்தார். அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் பணத்திற்காக கூலிப்படையாக செயல்பட்டு சுவாமிதாஸை கொலை செய்தது தெரியவந்துள்ளது.

ஏற்கனவே ஸ்டாலின் மீது இரண்டு கொலை வழக்குகள் மற்றும் சில திருட்டு வழக்குகள் உள்ள நிலையில், மர்ம நபர் ஒருவர் கூறியதன் பேரில் ஸ்டாலின் சுவாமிதாஸை கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்டாலின் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில் “காரணம் தெரியாது கொலை பண்ண சொன்னாங்க கொலை பண்ணிட்டேன்” என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து ஸ்டாலினை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை கஸ்டடி எடுத்து விசாரணை நடத்திய பிறகே கொலைக்கான முழு விவரமும் தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

சொத்து பிரச்சனை, அல்லது முன் பகை காரணமாக சுவாமிதாஸ் கொலை செய்யப்பட்டாரா.? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அம்பலம் செய்திப்பிரிவு


banner

Related posts

‘’சண்டை போட்டுக்காதீங்க’’.! தேர்தல் வேலைய பாருங்க.! தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித்ஷா அறிவுரை..!

Ambalam News

பாலியல் வன்கொடுமை – தொடர் கொலைகள்.. கர்நாடகா தர்மஸ்தலா பயங்கரம்..

Admin

ரூ.300 கோடிக்கு ட்ரோன் ஆர்டர் கொடுத்த இந்திய ராணுவம்! சூடு பிடிக்கும் ட்ரோன் சந்தை

Admin

Leave a Comment