இசைஞானி இளையராஜாவுக்கு நினைவு பரிசு வழங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


தமிழ் திரை இசையை உலக அளவில் புகழ்பெற செய்த இசையுலக நாயகன் இசைஞானி இளையராஜா, திரை இசை உலகில் 50 ஆண்டுகளை கடந்ததையொட்டி, அவருக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.
“சிம்பொனி – சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா – பொன்விழா ஆண்டு 50” என்ற தலைப்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழக அரசு சார்பில் இந்த பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன் உள்பட திரைப்பிரபலங்கள் உள்பட பலர் பங்கேற்றுள்ளனர். 50 ஆண்டுகளாக தமிழ் இசைத்துறையில் முக்கிய பங்களிப்பை வழங்கி, ஒட்டுமொத்த தமிழர் உலகமே கொண்டாடும் இசையமைப்பாளராக விளங்கும் இளையராஜாவுக்கு, தமிழக அரசு சார்பில் அளிக்கப்படும் இந்த கவுரவம் தமிழ் இசைத்துறை வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசு வழங்குகிறார்.


banner

Related posts

ராஜினாமா செய்துவிட்டு ஓடிய நேபாள் பிரதமர்.. கட்டுக்கடங்காத கலவரம்..! நேபாளத்தில் உண்மையில் என்ன நடக்கிறது..!

Ambalam News

மதுரையில் தவெக மாநாடு.. தேதியை அறிவித்த விஜய்.!

Ambalam News

தமிழ்நாட்டில் ஏழு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்.! தமிழ்நாடு அரசு உத்தரவு

Ambalam News

Leave a Comment