கரூரில் நடந்த தவெக தேர்தல் பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், கூட்டநெரிசலில் சிக்கி மக்கள் உயிரிழந்த நிலையில், தவெக நிர்வாகிகள் தப்பியோடிவிட்டனர், என்ன மாதிரியான கட்சி இது என தவெகவை சென்னை உயர்நீதிமன்றம் காட்டமாக விமர்சித்துள்ளது. அதே சமயம் அரசுத்தரப்பையும் கடுமையாக விமர்சித்துள்ளது.
தவெக தரப்பை கண்டித்த நீதிமன்றம், பெண்கள், குழந்தைகள் பலியான நிலையில், கட்சி தொண்டர்களை, ரசிகர்களை பொறுப்பற்ற முறையில் கைவிட்டு விட்டு ஓடிய, த.வெ.க. தலைவர் விஜய் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு தலைமைப் பண்பு இல்லை. சம்பவத்துக்கு பொறுப்பேற்கவும் இல்லை என கண்டனம் தெரிவித்த நீதிபதி, சம்பவம் நடந்து ஒரு வார காலமானதைச் சுட்டிக்காட்டி, வழக்கை விசாரிக்க, வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில், நாமக்கல் எஸ்பி அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், மீண்டும் கரூர் துயர சம்பவம் குறித்து விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழுவில், கூடுதல் உறுப்பினர்களை இணைத்துக்கொள்ள, ஐ.ஜி. அஸ்கா கர்க்-க்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த குழுவில் நாமக்கல் எஸ்.பி.விமலா, சி.எஸ்.சி.ஐ.டி எஸ்.பி.ஷியமளா தேவி ஆகியோரை இணைத்துக்கொள்ள பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான உதவிகளை வழக்க தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.