கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 உயிரிழந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.
இந்நிலையில், இன்று சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டிருக்கின்றனர். விஜய் வீட்டை கடந்து செல்லும் வாகனங்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. பல வாகனங்கள் விஜய் வீட்டை கடந்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. தவெக தலைவர் விஜய் கைது செப்பட்டலாம் என்ற தகவல் பரவி வருவதால் தொண்டர்கள் பரபரப்படைந்துள்ளனர்.