நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கு : சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு…


நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கு : சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு

மாற்று சாதி பெண்ணை காதலித்த நெல்லையைச் சேர்ந்த பட்டியலின இளைஞர் கவின் செல்வகணேஷ் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திரு. கவின் செல்வகணேஷ் த/பெ சந்திரசேகர் என்பவர் கடந்த 27.07.2025 அன்று, திருநெல்வேலி மாநகரில் கொலைசெய்யப்பட்டார்.

இது தொடர்பாக, இறந்த கவின் செல்வகணேஷின் தாயார் கொடுத்த புகார் மனுவின் மீது பாளையங்கோட்டை காவல் நிலைய குற்ற எண்: 396/2025 சட்டப் பிரிவுகள் 296(b), 49, 103(1) BNS உ/இ சட்ட பிரிவுகள் 3(1)(r), 3(1)(s), 3(2)(v) தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டம் ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட சுர்ஜித், அவரது தந்தை சரவணன் மற்றும் தாயார் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டவரும், குற்றம் சாட்டப்பட்ட சுர்ஜித்தின் சகோதரியும் பழகி வந்த நிலையில், இது தொடர்பான பிரச்சனையில் இந்த கொலை நடந்துள்ளதாகத் தெரியவருகிறது.

குற்றம் சாட்டப்பட்ட சுர்ஜித் அதே நாளில் (27.07.2025) கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார். மேலும் அவர் மீது இன்று (30.07.2025) குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


banner

Related posts

மோடியா.? லேடியா.? என்று முழங்கிய ஜெயலலிதாவின் அதிமுக ‘அண்ணன் அமித்ஷா சொல்கிறபடி நடப்போம்’ என்ற பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது – மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்..

Ambalam News

சிறுமிக்கு பாலியல் தொல்லை போலீஸ் ஏட்டு கைது.. சிறுமியின் தாயும் உடந்தை

Ambalam News

தூய்மைப்பணியாளர்கள் போராட்டம் – அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு

Ambalam News

Leave a Comment