குண்டர் சட்டத்தில் கைதான பிரபல நடிகருக்கு சென்னைக்குள் நுழைய போலீஸ் தடை


சென்னை நுங்கம்பாக்கத்தில் சில மாதங்களுக்கு முன்பாக நட்சத்திர பார் ஒன்றில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக, அதிமுக ஐடி விங் முன்னாள் நிர்வாகி அஜய் வாண்டையார் மற்றும் பிரசாந்த், சுனாமி சேதுபதி, தூண்டில் ராஜா ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். மன்னார்குடியை சேர்ந்த அஜய் வாண்டையார் மீது ஏற்கெனவே அடிதடி தகராறு உள்ளிட்ட சில வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் நட்சத்திர பார்களில் அடிக்கடி தகராறு செய்யும் நபர் என்றும் அப்போது போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாக தகவல்கள் வந்தது.
மன்னார்குடியைச் சேர்ந்த அஜய் வாண்டையார் முதலில், கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பிலும் இடம்பெற்றிருந்தார். அதிலிருந்து விலகி அதிமுகவில் சேர்ந்திருந்தார். தமிழ் சினிமாவில் சில படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். ‘ரெட் அண்ட் பாலோ’ மற்றும் ‘மாய நாரிழை’ ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் இரண்டு படங்கலும் இன்னும் திரைக்கு வரவில்லை.
இந்நிலையில் தான், அஜய் வாண்டையார் உள்ளிட்டோர் சில மாதங்களுக்கு முன்னதாக நுங்கம்பாக்கத்தில் கேளிக்கை விடுதியில் நடைபெற்ற சண்டையில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து அஜய் வாண்டையார் மற்றும் சுனாமி சேதுபதி ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க பரிந்துரைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவ்விருவரையும் சென்னை மாநகர காவல் ஆணையர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்தார். தற்போது ஜாமீனில் வெளிவந்திருகிக்கிறார்.
இந்நிலையில் தான் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் அஜய் வாண்டையார் உள்ளிட்ட 5 நபர்கள் சென்னைக்குள் வர தடை விதிக்கப்படுவதாக காவல்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னை பெருநகர காவல் எல்லைக்குள் நுழைந்து பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய ரவுடிகளை கண்டறிந்து காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, அஜய் வாண்டையார், நாகேந்திர சேதுபதி, பிரேம்குமார், ராஜா, செல்வபாரதி ஆகிய 5 ரவுடிகள் அடுத்த ஒரு ஆண்டிற்கு சென்னை நகர் பகுதிக்குள் வர கூடாது என்று சென்னை பெருநகர காவல்துறை தடை விதித்துள்ளது. தடை விதிக்கப்பட்டுள்ள ரவுடிகள் பெருநகர காவல் நிலைய எல்லைக்குள் நீதிமன்ற வழக்கு தொடர்பாகவோ, அல்லது காவல்துறையினர் விசாரணை தொடர்பாகவோ, மட்டுமே வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை தவிர்த்து, வேறு காரணத்திற்காக நுழைந்தால் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அஜய் வாந்தையார் கும்பளிடம் நடத்தப்பட்ட விசாரணையின் தொடர்ச்சியாகத்தான், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா உள்ளிட்டோர் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.


banner

Related posts

14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. டேக்வாண்டோ பயிற்சியாளர் மீது போக்ஸோ வழக்கு – ஒருவர் கைது.

Ambalam News

ஒட்டுக்கேட்பு கருவியை வைத்தது அன்புமணி தான் – திட்டவட்டமாக கூறிய ராமதாஸ்

Ambalam News

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐக்கு மாறுகிறதா.? – காவல்துறை மீது தொடரும் நீதிமன்ற விமர்சனங்கள்..

Ambalam News

Leave a Comment