பள்ளி, கல்லூரி விடுதிகள் சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும் – முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்



தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் ஏழை மாணவர்களுக்கான 2,739 மாணவர்கள் விடுதிகள் செயல்பட்டு வருகிறது. விடுதிகளில் தங்கி படிப்பை மேற்கொண்டு வரும் வகையில், 1,79,568 மாணவ மாணவியர்கள் பயன்பெற்று வருகின்றனர். இனி இந்த விடுதிகள் ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதன்படி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் துறையின்கீழ் செயல்பட்டு வரும் 727 பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் 41,194 மாணவ மாணவிகளும், 455 மிகப் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் 26,653 மாணவ மாணவிகளும், 157 சீர்மரபினர் விடுதிகளில் 9,372 மாணவ மாணவிகளும், 20 சிறுபான்மையினர் நல விடுதிகளில் 1.250 மாணவ மாணவிகளும் தங்கிப் பயின்று வருகின்றனர்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 1,332 ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில் 98.909 மாணவ மாணவியர்களும், 48 பழங்குடியினர் விடுதிகளில் 2,190 மாணவ மாணவியர்களும் சேர்ந்து பயின்று வருகின்றனர். இவ்வாறு மொத்தமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,739 விடுதிகளில் 1,79,568 மாணவ மாணவியர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ”பேதங்களைத் தகர்த்தெறிந்து சமத்துவத்தையும் – சமூகநீதியையும் காக்க புரட்சியால் புதுமையைப் படைப்பதே திராவிட வரலாறு. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.


banner

Related posts

இராமநாதபுரத்தில் புதிய விமான நிலையம் அமைக்க மக்கள் எதிர்ப்பு – ஆட்சியரிடம் மனு

Ambalam News

முருகன் மாநாடு: எடப்பாடி பழனிச்சாமி மீது முன்னாள் அமைச்சர்கள் அதிருப்தி.! அதிமுகவில் நடப்பது என்ன?

Admin

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் காலை உணவு திட்ட விரிவாக்க விழா.. சிறப்பு விருந்தினராக பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் அவர்கள் பங்கேற்கிறார்..

Ambalam News

Leave a Comment