தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு சென்று சமூக சேவை செய்துவரும் சமூக சேவகர்களை அவர்களின் சேவையை பாராட்டி நீதியரசர் கிருஷ்ண பட் மற்றும் டிஜிபி.மஞ்சுநாத் பாபு ஆகியோர் ராஜ்ய ரத்னா விருது வழங்கி சிறப்பித்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் சமூக சேவை செய்து வரும், தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தை சார்ந்த பொறியாளர் மற்றும் சமூக சேவகர் முனைவர். ஜெயராஜ் வேலாயுதம் வழக்கறிஞர்கள் இ.கோபால் ஆபரன், ரஞ்ஜித்குமார், தினேஷ் சக்திவேலு, கராத்தே பயிற்சியாளர் பிரபாகரன், சுற்றுச்சூழல் ஆர்வலர் சினோஷ் நாராயணன், சட்ட மாணவன் ராகுல், போக்குவரத்து காவலர் ராஜதீபன் ஆகியோருக்கு அவர்களின் சமூக சேவைகளை பாராட்டி கர்நாடக ‘’ராஜ்ய ரத்னா’ விருதினை நீதியரசர் கிருஷ்ண பட் மற்றும் டிஜிபி.மஞ்சுநாத் பாபு ஆகியோர் வழங்கி சிறப்பித்துள்ளனர்.