அரசின் திட்டங்கள், திட்ட விளம்பரங்களில் முதலமைச்சரின் பெயர் முன்னாள் முதலமைச்சரின் பெயரை பயன்படுத்தக்கூடாது – சி.வி சண்முகம் மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு



உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்த விளம்பரத்தில் முதலமைச்சரின் பெயரையும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புகைப்படத்தையும் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என அதிமுக மக்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
சி.வி.சண்முகம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, சுந்தர் மோகன் அமர்வு விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.


இந்த வழக்கில், உச்ச நீதிமன்ற உத்தரவைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள் அரசு விளம்பரங்களில் முதலமைச்சரின் புகைப்படத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் முதலமைச்சரின் பெயரையும், கட்சியின் கொள்கை, தலைவர்களின் புகைப்படம், சின்னங்கள் மற்றும் முன்னாள் முதலமைச்சர் புகைப்படத்தையும் பயன்படுத்துவது உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் விரோதமானது என்று தெரிவித்தனர்.

எனவே அரசுத் திட்டங்களில் முதலமைச்சரின் பெயர் மற்றும் முன்னாள் முதலமைச்சரின் புகைப்படத்தைப் பயன்படுத்தத் தடை விதிப்பதாகத் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரைத் தேர்தல் ஆணையம் விசாரிக்க இந்த வழக்கு தடையாக இருக்காது எனவும் தெளிவுபட கூறியுள்ளனர்.


banner

Related posts

மகளின் காதலனை ஆணவக்கொலை செய்த தாய்.? மயிலாடுதுறையில் பயங்கரம்..

Ambalam News

கேப்டன் பிரபாகரன் திரைப்படம் 800 திரையரங்குகளில் ரீரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்

Ambalam News

மத்திய கூட்டுறவு வங்கியில் கவரிங் நகைகளை அடகு வைத்து 3 கோடியை சுருட்டிய வங்கியின் மேலாளர் கைது

Ambalam News

Leave a Comment