திருப்பூரில் எஸ்.ஐ வெட்டிக் கொலை..விசாரணக்கு சென்றபோது நடந்த அதிர்ச்சி சம்பவம்..



திருப்பூரில் தந்தை மகன்கள் பிரச்னை குறித்து விசாரிக்க சென்ற போது சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலை குடிபோதையில் இருந்த தந்தை மகன்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள குடிமங்கலம் பகுதியில் மடத்துக்குளம் அதிமுக எம்.எல்.ஏ மகேந்திரனுக்கு சொந்தமான நிலம் உள்ளது. அங்கு மூர்த்தி என்பவரும், அவரது மகன் தங்கபாண்டியன் என்பவரும் தங்கி பணியாற்றி வருகின்றனர். இருவரும் இடையே நேற்று இரவு மதுபோதையில் தகராறில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் தங்கபாண்டி தனது தந்தை மூர்த்தியை கடுமையாக தாக்கியுள்ளார்.
இது குறித்து அருகில் இருந்தவர்கள் காவல் அவசர உதவி எண் 100 க்கு தொடர்புகொண்டு பிரச்னை குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து குடிமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல் ரோந்து பணியில் இருந்த காரணத்தால், அவருக்கு முதலில் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற உதவி ஆய்வாளர் சண்முகவேல் தந்தை, மகன் சண்டையை பிரித்து காயமடைந்த மூர்த்தியை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த மூர்த்தியின் மகன் தங்கபாண்டி, அருகே நின்று கொண்டிருந்த உதவி ஆய்வாளரை வெட்டி கொலை செய்தார். அவர் உடன் இருந்த காவல் வாகன ஓட்டுனரையும் கொலைவெறியோடு துரத்தியிருக்கிறார்.
அவர் தப்பி சென்று காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டப்பட்ட சம்பவத்தை தெரிவித்துள்ளார். விரைந்து வந்த குடிமங்கலம் காவல்துறையினர். தப்பிச் சென்ற தங்கபாண்டியனை தேடி வருகின்றனர்


banner

Related posts

இரசாயன வாயு கசிவு : 80 பேர் மயக்கம்: கடலூர் சிப்காடில் இயங்கும் உயிர்ப் பலி இரசாயன ஆலையை மூட வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

Ambalam News

ஒன்றிய அரசை கண்டித்து திருப்பூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி போராட்டம்..

Ambalam News

ரிதன்யா தற்கொலை வழக்கு – ஜாமீன்மனு மீது பதில் தர போலீசுக்கு ஐகோர்ட் உத்தரவு

Admin

Leave a Comment