கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள பாலூர் காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் பெனிட்டா ஜெய அன்னாள் (வயது 20). இவர் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் வடக்கு வேடச்சந்தூர் நாககோனானூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் (21) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் கார்த்திக் மனைவி பெனிட்டா ஜெய அன்னாள் வீட்டிலேயே தங்கியிருந்து, தனியார் நிறுவனத்தில் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இனிலயில், கர்ப்பிணியாக இருந்த பெனிட்டா ஜெய அன்னாளுக்கு கடந்த 40 நாட்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்தநிலையில் கடந்த 9-ந் தேதி இரவு கார்த்திக் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் அவருடைய குழந்தை அசைவற்ற நிலையில் கிடந்துள்ளது.
இதுபற்றி மனைவியிடம் கேட்டபோது பாலூட்டிய போது குழந்தை தவறி கீழே விழுந்து காயமடைந்ததாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திக் குழந்தையை சிகிச்சைக்காக கருங்கலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றுள்ளார். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக கூறினார்.
இதனாக்ல் அதிர்ச்சி அடைந்த கார்த்தி, கருங்கல் போலீசில் புகார் அளித்தார். கார்த்திக்கின் புகாரை அடுத்து, போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில், குழந்தை கொலை செய்யப்பட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியானது. இதையடுத்து போலீசார் குழந்தையின் தாயிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் குழந்தையை கொன்றதை ஒப்பு கொண்டார். மேலும் குழந்தையை கொன்றது ஏன்? என்பது குறித்து திடுக்கிடும் தகவலை போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
எனக்கு குழந்தை பிறந்து 40 நாட்கள் ஆனது. குழந்தை பிறந்ததில் இருந்தே இருந்தே என் கணவர் என் மீது செலுத்தும் அன்பு குறைந்து விட்டது. இதனால் வீட்டில் எனக்கும் அவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதற்ககெல்லாம் குழந்தை தான் காரணம் என்ற ஆத்திரத்தில், குழந்தையின் வாயில் பேப்பரை திணித்து கொன்றேன் என்று பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Related posts
Click to comment