‘’உங்களுக்காகவே குரல் கொடுக்க’’ ‘’உங்க விஜய் நா வாரேன்’’ தொடங்கியது விஜய்யின் தேர்தல் பிரச்சாரம்..


மனசாட்சி உள்ள மக்களாட்சி’’யை அமைக்கும் உன்னத லட்சிய நோக்குடன் ‘’என் குடும்ப உறவுகளாகிய உங்களை சந்திக்க’’ ‘’உங்களுக்காகவே குரல் கொடுக்க’’ ‘’உங்க விஜய் நா வாரேன்’’ ‘’மக்களிடம் செல்’’ என்ற பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் ஆணையை மானசீகமாக ஏற்று, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வருகிறேன்.
பொய்யான வாக்குறுதிகளை தந்து மக்களை ஏமாற்றி வரும் வெற்று விளம்பர மாடல் திமுக அரசின் மீதான நம்பிக்கையை மக்கள் முற்றுலும் இழந்து விட்டனர். தங்களுக்கென்றே உண்மையான தோழமை மற்றும் பாரபட்சமற்ற தன்மையுடன் கூடிய ஓர் அரசு அமையவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
நாளை 12.09.2025 காலை 10.35 மணிக்கு திருச்சி காந்தி மார்க்கெட் காவல் சரகம் மரக்கட்டை எம்ஜிஆர் சிலை அருகே தொடங்கி அடுத்தடுத்து மதுரை மாநாட்டில் சொல்லியது போலவே, என் குடும்ப உறவுகளாகிய உங்களை சந்திக்க, உங்களுக்காகவே குரல் கொடுக்க, கொள்கை தலைவர்கள் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அண்ணல் அம்பேத்கர், வீரமங்கை வேலு நாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள், ஆகியோரின் வழியில் ‘’மக்களிடம் செல்’’ என்ற பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் ஆணையை மானசீகமாக ஏற்று, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வருகிறேன்.


ஓர் அரசியல் கட்சியின் தலைவராக, நாம் ஜனநாயக முறையில் மக்களை சந்திக்க விழைகிறோம், இந்நிலையில், தமிழ்நாடு அரசியலிலேயே இதுவரை இல்லாத வகையில், எந்த அரசியல் தலைவருக்கும் செய்யாத வகையில், மக்கள் சந்திப்பு சார்ந்த பாதுகாப்பு நிபந்தனைகளை நாம் கழகத்தின் மீது மட்டும் காவல்துறை விதித்துள்ளது. இப்படி பாதுகாப்பு சார்ந்த தமது பொறுப்பைத் தட்டிக்கழிக்காமல், அரசியல் நிலைப்பாடுகளை கடந்து தார்மீக கடமையோடு, நமது கழகத் தோழர்களுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பு வழங்குவதை இந்த அரசும் காவல்துறையை வழி நடத்தும் தமிழ்நாடு முதலமைச்சரும் உறுதி செய்ய வேண்டும்.
கழகத் தோழர்களாகிய நீங்களும் நமது பொதுமக்கள் சந்திப்பிற்கு ஏதுவாக, அந்தந்த மாவட்டங்களில் பங்கு பெற்றும் சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டும், ஏற்கனவே பொது மக்களுக்கு இடையூரின்றி, மக்கள் சந்திப்புகளை நடத்த, நாம் தேர்ந்தெடுத்துள்ளக் நாட்களில் அவர்களை சந்திக்க ஏதுவாக பாதுகாவலர்கள், தன்னார்வலர்கள், மற்றும் காவல்துறைக்கு உறுதுணையாக காவல்துறை அளித்துள்ள வழிமுறைகளை கடமை கண்ணியம் மட்டும் ராணுவ கட்டுப்பாட்டுடன் பின்பற்றி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கனான மாவட்ட பொறுப்பாளர்களுக்கு உறுதுணையாக இருந்து உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.


banner

Related posts

தூய்மைப்பணியாளர்கள் போராட்டம் – அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு

Ambalam News

மண் கடத்தல் லாரிக்கு லஞ்ச பேரம் பேசிய டிஎஸ்பி

Admin

இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே கைது

Ambalam News

Leave a Comment