திருச்சி | தொடர்ந்து 3 வது முறையாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரி


உயர் அதிகாரிகளை மதிக்காமல் நடந்து கொள்ளும் அதிகாரிகள் துறைரீதியான நடவடிக்கைக்கு ஆளாவதையும், மெமோ வாங்குவதையும், சஸ்பெண்ட் ஆவதையும் தொடர்ந்து நாம் பார்த்து இருக்கிறோம். ஆனால் சில சமயங்களில் சில அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கைக்கு உள்ளாவதும் தெரிந்த கதைதான். அதையும் தாண்டி ஒருசில அதிகாரிகள் உயர் அதிகாரிகளின் உத்தரவுக்கு செவி சாய்க்காமல் தான்தோன்றித்தானமாக செயல்பட்டு தொடர்ந்து சஸ்பெண்ட் ஆவது அரிதிலும் அரிது. அப்படி தொடர்ந்து மூன்றுமுறை சஸ்பெண்ட் ஆகியிருக்கிறார் ஒரு வட்டாரவளர்ச்சி அலுவலர்.

திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் ஊராட்சி ஒன்றியம் தளுகை ஊராட்சியில் கட்டப்பட்ட சமத்துவபுரத்தில் ஆளுங்கட்சியை சேர்ந்த நபர்களுக்கு அதிக வீடுகள் ஒதுக்கப்பட்டதாக கூறி கடந்த பிப்ரவரி 4 – ம் தேதி 50 கும் மேற்ப்பட்ட பெண்கள் உப்பிலியாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுக்கையிட்டனர். அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் பெண்களை ஒறுமையில் பேசியதால் அவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

இந்த விவாவரம் பெரிதானதால், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் கங்காதரணி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதையடுத்து முசிறி ஆர். டி. ஓ. பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வட்டாரவளர்ச்சி அலுவலர் செந்தில்குமாரை அலைபேசியில் அழைத்தபோது அவரது அலைபேசி சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த விவகாரம் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு சென்றுள்ளது. தற்போது வட்டார வளர்ச்சி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே அரசு பள்ளிக்கு விடுமுறை அளித்தது, உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தியது. தொடர்பான புகாரில் செந்தில்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதேபோல சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளை விரைவாக செய்யாமல் அலட்சியமாக இருந்த காரணத்திற்காக இரண்டாவது முறையாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

தற்போது மூன்றாவது முறையாக சமத்துவபுர விவகாரத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.


banner

Related posts

எடப்பாடி பழனிச்சாமியின் அதிமுக-திமுக கூட்டணி திட்டம் | உடைந்த அதிமுக…? சி.வி சண்முகம் தலைமையிலான அதிமுக உறுப்பினர்கள் தவெகவுக்கு ஆதரவு…

Ambalam News

தவெகவினரின் அத்துமீறலுக்கு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்போகிறார்? – அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்

Ambalam News

போதைபொருள் டீலருடன் நடிகர் கிருஷ்ணா கைது.. சிக்கியது எப்படி

Admin

Leave a Comment