சக்தித் திருமகன் படத்தின் பாடல் வெளியீடு குறித்த தனது அறிவிப்பை இசையமைப்பாளரும் தயாரிப்பாளருமான விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார்.
விஜய் ஆண்டனி நடித்து சமீபத்தில் வெளியான ரோமியோ, மழை பிடிக்காத மனிதன், ஹிட்லர், போன்ற படங்கள் மார்க்கெட்டில் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், அண்மையில் வெளிவந்த மார்கன் படமும் சுமாரான விமர்சனங்களையே பெற்றது.
இந்நிலையில் பிச்சைக்காரன் 3 இம் பாகத்தை இயக்கி நடிக்க உள்ளதாக விஜய் ஆண்டனி தெரிவித்தார்.

இதனிடையே, விஜய் ஆண்டனியின் 25 – வது படமாக உருவாக்கியுள்ள சக்தித்திருமகன் படத்தை, விஜய் ஆண்டனி தயாரிக்க, அருண் பிரபு எழுதி, இயக்குகிறார். அரசியல் கதையாக உருவாக்கியுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனி கேங்ஸ்டராக நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் முதல் பாடலான ‘’டபுள்ஸ்’’ என்ற பாடல் நாளை வெளியாகும் என்று விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
சக்தித் திருமகன் படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி திரைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.