நாயை துப்பாக்கியால் சுட முயற்சிசிறுவன் மீது பாய்ந்த குண்டு



நாயை துப்பாக்கியால் சுட முயற்சி
சிறுவன் மீது பாய்ந்த குண்டு செங்கல்பட்டில் நடந்த பகீர் சம்பவம்

செங்கல்பட்டில் நரிக்குறவர் தெரு நாயை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயற்சித்த போது தவறுதலாக சிறுவன் மீது குண்டு பாய்ந்ததில் சிறுவன் படுகாயம் அடைந்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொங்கரந்தாங்கல் கிராமத்ததில் உடல் நலம் பாதிக்கப்பட்ட தெருநாயை சரத்குமார் என்ற நாடோடி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்

அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் மகனான ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன் குறளரசன் என்பவர் கடைக்குச் சென்றுள்ளார் அப்பொழுது அந்த துப்பாக்கியில் இருந்து வெளிப்பட்ட ஈய குண்டுகள் சுவற்றின் மீது பட்டு தவறுதலாக அந்த வழியாக நடந்து சென்ற பள்ளி மாணவன் குறளரசன் தலையில் பாய்ந்துள்ளது. இதில், காயமடைந்த சிறுவனை அவர்களது பெற்றோர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் சிறுவன் காயமடைந்ததால் சித்தாமூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து வெங்கடேசன் மற்றும் நரிக்குறவர் சரத்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது


banner

Related posts

தேமுதிகவின் ‘மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 – தேமுதிக அறிவிப்பு

Ambalam News

காவல்துறை, ஆசிரியர்களின் சாதிவாரி வாட்ஸ் அப் குழுக்கள் – சிபிஎம் செயலாளர் சண்முகம் பகீர் குற்றச்சாட்டு..! என்ன செய்யப்போகிறது.? தமிழக அரசு

Ambalam News

அரசின் திட்டங்கள், திட்ட விளம்பரங்களில் முதலமைச்சரின் பெயர் முன்னாள் முதலமைச்சரின் பெயரை பயன்படுத்தக்கூடாது – சி.வி சண்முகம் மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Ambalam News

Leave a Comment