சென்னையில் பெண்களை பாதுகாக்க களமிறங்கும் – ரோபோட்டிக் காப்


சென்னையில் பணிபுரியும் செய்யும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சென்னை காவல்துறை புதிய முயற்சியை எடுத்துள்ளது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பெண்கள் வேலைக்காக சென்னைக்கு வருகிறார்கள். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ரோபோட்டிக் காப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரோபோட்டிக் காப் நகரின் முக்கியமான 200 இடங்களில் நிறுவப்பட உள்ளது அதில் ஒரு சிவப்பு பட்டனை ஆபத்தில் சிக்கும் பெண்கள் அழுத்தினால் போதும். உடனடியாக அருகில் இருக்கும் ரோந்து காவலர்கள் வருவார்கள்.

இது குறித்து சென்னை காவல்துறை ஒரு வெளியிட்டுள்ள அறிக்கையில்,. “சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில் பெண்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், பெண்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் சென்று வரும் பொது இடங்கள், சில குற்ற நிகழ்வு இடங்களிலும் அவசர காவல் உதவிக்காக, பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக ‘ரெட் பட்டன்- ரோபோட்டிக் காப்’ (ரோபோ போலீஸ்) அறிமுகம் செய்யப்பட இருக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, சென்னை போலீஸ் கமிஷனர் அருண் அவர்களின் உத்தரவின் படி இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய ரோபோ காப்.

மாநகரின் 200 முக்கிய இடங்களில் ரெட் பட்டன்- ரோபோட்டிக் காப் என்ற புதிய பாதுகாப்பு சாதனம் விரைவில் பொருத்தம்.

24 மணிநேரமும் இயங்கக் கூடிய இந்த பாதுகாப்பு சாதனம் 360 டிகிரியில் சாலையின் அனைத்து பகுதிகளையும் அலசி ஆராயும்.

சாதனத்தில் உள்ள சிவப்பு நிற பொத்தானை அழுத்துவதன் மூலம் காவல் கட்டுபாட்டு அறையுடன் நேரடி தொடர்பு கொள்ள முடியும்

உடனடியாக காவல் துறைக்கு அழைப்பும், அருகில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை எச்சரிக்கைப்படுத்தவும் முடியும்.

ஆபத்தில் சிக்கியவரை காவல் கட்டுப்பாட்டு அறையில் உள்ளவர்கள் நேரடியாக தொடர்பு கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

வீடியோ கால் மூலம் ஆபத்தில் உள்ளவரின் நிலை அறிந்து கொள்ளவும் முடியும்.

அதிகமாக மக்கள் கூடும் இடங்கள் தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள், பூங்காக்கள், மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள், உள்ளிட்ட இடங்களில் சாதனத்தை பொருத்த திட்டமிட்டுருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதை அடுத்து மக்கள் வரவேற்றுள்ளனர்.


banner

Related posts

தமிழக காவல்துறையில் என்னதான் நடக்கிறது.?

Admin

கடலூர் ரயில் தண்டவாளத்தில் பள்ளி வாகனம் கவிழ்ந்து 6 மாணவர்கள் படுகாயம்..

Ambalam News

டிஜிபி அலுவலக வாசலில் ஏர்போர்ட் மூர்த்தியை செருப்பால் அடித்து தாக்கிய மர்ம நபர்கள் – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

Ambalam News

Leave a Comment