அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்ககளை அதிமுகவிற்குள் சேர்க்க வேண்டும். அவர்கள் எந்த பதவிகளையும் பொறுப்புகளையும் எதிர்பார்க்கவில்லை என்று தெரிவிக்கிறார்கள். அவர்களை ஒன்றிணைத்து அதிமுகவை வலுப்படுத்த வேண்டும். அப்போதுதான் அதிமுக மாபெரும் வெற்றியை பெறும். இந்த கருத்தை நானும், சி.வி. சண்முகம், எஸ்.பி வேலுமணி, தங்கமணி, ஆகியோருடன் சென்று கட்சியின் பொதுச்செயலாளரை ( எடப்பாடி பழனிச்சாமி) சந்தித்து ஒருங்கினைப்பு குறித்து பேசினோம். ஆனால் அவர் ஏற்பதாக இல்லை. அதுமட்டுமின்றி அதன் பின்னர் கழகத்தின் பொதுவான கருத்துகளை என்னிடத்தில் என்றைக்கும் அழைத்து பேசவில்லை. பிரிந்து சென்றவர்கள் கட்சி பணியாற்றாமல் ஒதுங்கி இருக்கின்றனர். பேச முன்வரவில்லை. பிரிந்து சென்ற அனைவரையும் அழைத்து 10 நாட்களுக்குள் ஒன்று சேர்க்கவில்லையெனில், என்னைப்போல் மனநிலையில் உள்ளவர்களை இணைத்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று தெரிவித்துள்ளார். செங்கோட்டையனின் கருத்தை பாஜக தமிழக தலைவர் வரவேற்றுள்ளார். அதேபோல செங்கோட்டையனின் கருத்தை ஓபிஎஸ் வரவேற்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
செங்கோட்டையனின் கூற்றுப்படி, பார்த்தால் அதிமுகவிற்குள் இதே மனநிலையில் பல முக்கிய நிர்வாகிகள் இருப்பதை வெளிப்படுத்தியிருக்கிது.
Related posts
Click to comment