சிறுமிக்கு பாலியல் தொல்லை போலீஸ் ஏட்டு கைது.. சிறுமியின் தாயும் உடந்தை


நெல்லை மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை காவலர் போக்சோவில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் அழகிய மண்டபம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவர் திருநெல்வேலி மாநகர ஆயுதப்படையில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். திருநெல்வேலியில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படும் அழகிய மண்டபத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தலைமைக்காவளருக்கு அறிமுகமாகியிருக்கிறார். அடிக்கடி பேசி பழக அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில். அடிக்கடி பெண்ணின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். தலைமை காவலரும் அந்த பெண்ணும் கணவன் மனைவி போல் இணைந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த அந்த பெண்ணின் மகளுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைமைக் காவலர் சசிகுமார் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த சிறுமி அதிர்ச்சியிலும், மன உளைச்சலிலும் பள்ளியில் யாரிடமும் பேசாமல், தனித்தே இருந்துள்ளார்.
வகுப்பு ஆசிரியை, சிறுமியை தனியாக அழைத்து விசாரித்தபோது, தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து கண்ணீருடன் கூறி அழுதிருக்கிறார். தடுக்க வேண்டிய தாயும் கண்டுகொள்ளாமல் விட்டது தான் ஆசிரியைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுகுறித்து, தலைமையாசிரியை உதவியுடன் மாவட்ட குழந்தைகள் நல அமைப்பிடம் புகார் அளித்துள்ளனர். குழந்தைகள் நல அலுவலர் தினேஷ் என்பவர் மாணவியிடம் விசாரணை செய்ததில், அவருக்கு நடந்த பாலியல் அத்துமீறல்கள் தெரியவந்தது.
உடனே அவருக்கு அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. தொடர்ந்து காவலர் சசிகுமார் குறித்து பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணை மேற்கொண்ட போலீசார் மாணவிக்கு பாலியல் தொல்லை நிகழ்ந்திருப்பதை உறுதி செய்ததையடுத்து தலைமைக் காவலர் சசிகுமாரை போக்சோவில் கைது செய்த போலீசார் அவரை திருநெல்வேலி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தினர்.
நீதிபதி அவரை வரும் 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். மகளை காக்க வேண்டிய தாயும், மக்களை காக்க வேண்டிய காவலர் ஒருவரும் சேர்ந்து கொண்டு சிறுமியை பாலியல் கொடுமை செய்திருப்பது அப்பகுதியில் மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது.


banner

Related posts

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை சூலூர்பேட்டையில் குற்றவாளி கைது

Admin

விஜய் தலைமையில் புதிய கூட்டணி.? கூட்டணியில் டி.டி.வி தினகரன், ஓபிஎஸ்..?

Ambalam News

ரூ.300 கோடிக்கு ட்ரோன் ஆர்டர் கொடுத்த இந்திய ராணுவம்! சூடு பிடிக்கும் ட்ரோன் சந்தை

Admin

Leave a Comment