நடிகர் ரோபோ சங்கர் மரணம்.. அரசியல் கட்சி தலைவர்கள் திரை பிரபலங்கள் இரங்கல்..


தமிழ் திரையுலகின் மிகச்சிறந்த காமெடியானாக அனைத்து தரப்பு ரசிகர்களின் மனதிலும் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் ரோபோ சங்கர். ஸ்டேண்டப் காமெடியானாகவும், மிமிக்ரி கலைஞராகவும் பிரபலமடைந்த நடிகர் ரோபோ சங்கர், தனுஷின் மாரி, விஜய்யின் புலி, அஜித்தின் விஸ்வாசம், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் போன்ற பெரிய ஹீரோக்களின் திரைப்படங்களில் படம் முழுவதும் வந்து தன்னுடைய நடிப்பு திறமையை நிரூபித்தார்.
தொடர்ந்து பல திரைப்படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த ரோபோ சங்கர், மஞ்சள் காமாலை நீர்சத்து குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்
இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரோபோ சங்கர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சிறந்த நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகரான ரோபோ சங்கரின் இழப்புக்கு திரைத்துறையினரும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழிசை சௌந்தர்ராஜன், எல்.முருகன், கே.அண்ணாமலை மற்றும் நடிகரும் அரசியல் தலைவருமான கமலஹாசன், நடிகர்கள் சிவகார்திகேயன், சிலம்பரசன், வெங்கட் பிரபு, போன்றோர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஆகச்சிறந்த கலைஞனை இழந்துள்ளோம்.


banner

Related posts

கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய வழக்கு..கால அவகாசம் கேட்கும் மதுரை ஆதீனம் தரப்பு

Ambalam News

திமுக வுக்கு அடுத்த தலைவலி ஸ்டார்ட்.. வனத்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் மர்ம மரணம்..

Ambalam News

ரூ.300 கோடிக்கு ட்ரோன் ஆர்டர் கொடுத்த இந்திய ராணுவம்! சூடு பிடிக்கும் ட்ரோன் சந்தை

Admin

Leave a Comment