முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் – தமிழகத்திற்கு 15,516 கோடி முதலீடுகள் – 17,613 வேலைவாய்ப்புகள்..



தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு அரசுமுறை சுற்றுப் பயணம் மேற்கொண்டு உள்ளார்.
ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். இங்கிலாந்து நாட்டின், லண்டன் நகரில் பல்வேறு தொழில் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் நடந்த உயர் மட்ட கூட்டங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். மேலும், பாதுகாப்பு மற்றும் விண்வெளி, கப்பல் கட்டும் நுண்ணறிவு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஜவுளி தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு உள்ளிட்ட தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டார்.

ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தில், தமிழகம் முன்னேறி செல்கிறது, முதலீடுகள் பொழிகின்றன என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டு உள்ள எக்ஸ் பதிவில், லண்டனில் இருந்து மகிழ்ச்சியான செய்தி. இங்கிலாந்து நாட்டை அடிப்படையாக கொண்ட இந்துஜா குழுமம், தமிழகத்தின் மின்சார வாகன சூழலுக்கான மின்கலம் சேமிப்பு சாதனங்களுக்காக ரூ.7,500 கோடி முதலீடு செய்ய உள்ளது. இதனால், ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
ஆஸ்டிராஜெனீகா நிறுவனத்தின் விரிவாக்கம் மற்றும் இதற்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஆகியவற்றால், இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கான தமிழக எழுச்சி பயணத்தின் வழியாக, ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளன. இதனால் நம்முடைய இளைஞர்களுக்கு 17,613 வேலைவாய்ப்புகள் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இவை வெறும் எண்கள் அல்ல. அவை வாய்ப்புகள், வருங்காலங்கள், மற்றும் கனவுகள். இது, செயலில் திராவிட மாடலின் மனவுறுதியாகும் என பதிவிட்டு உள்ளார்.
அவருடைய ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தில், 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. ஜெர்மனியில் 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், இங்கிலாந்தில் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. ஜெர்மனியில் ரூ.7,020 கோடியும், இங்கிலாந்தில் ரூ. 8,496 கோடியும் என மொத்தமாக ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளார்.
முதலமைச்சரின் இந்த சுற்றுப்பயண ஒப்பந்தங்கள் வாயிலாக, MoUs மூலம் மொத்தமாக 15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது இதன் வாயிலாக 17,613 வேலைவாய்ப்புகள் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


banner

Related posts

மாணவனை தாக்கிய தலைமை ஆசிரியர் – மாணவன் கலெக்டரிடம் புகார்

Ambalam News

உங்கள் மீதான குற்றச்சாட்டை நீங்களே விசாரிப்பது என்பது எந்த வகையில் நியாயம்?” வஞ்சிநாதன்..

Admin

பாஜகவால் கழட்டி விடப்பட்ட ஒபிஎஸ்.. பின்னனியில் எடப்பாடி பழனிச்சாமி.?

Admin

Leave a Comment