அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையின் மீது அதிருப்தியில் இருக்கும் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையானுக்கும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் மோதல் உச்சமடைந்ததை தொடர்ந்து,. நேற்று தனது சொந்த தொகுதியான, கோபிச்செட்டிபாளையத்தில், செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், ஒருங்கிணைந்த அதிமுகவை வலியுறுத்தி கழகத்தில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். “அ.தி.மு.க-விலிருந்து வெளியேறியவர்களை 10 நாட்களுக்குள் ஒருங்கிணைக்க வேண்டும்’’. எங்களது கோரிக்கையை மறுத்தால் என்னைப்போல் மனநிலை உள்ளவர்களை ஒன்றிணைத்து அதற்கான முயற்சியை மேற்கொள்வேன்” என்று கூறி, அதிமுகவால் ஒதுக்கிவைக்கப்பட்ட நீக்கப்பட்ட ஓ.பி.எஸ், டி.டி.வி, சசிகலா, டிடிவி.தினகரன் போன்றோர்க்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.
இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தேனியில் பிரச்சாரத்திற்காக வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அதிமுக கொடிகளுடன் திடீரென அவரது வாகனத்தின் குறுக்கே வந்து மறித்த பெண்கள், மற்றும் இளைஞர்கள் “வேண்டும் வேண்டும் ஒருங்கிணைய வேண்டும்; நிற்போம் நிற்போம் ஓரணியில் நிற்போம்” என கோஷமிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இத அடுத்தகட்டமாக தென் மாவட்டங்களில், ‘’முக்குலத்தோரை வஞ்சிக்கும் உங்களுக்கு தேவர் மண்ணில் என்ன வேலை’’ ‘’பழனிசாமியே தேவர் மண்ணில் கால் வைக்காதே’’ என்று தேவர் பேரவை சார்பில் போஸ்டர்கள் ஒட்டடப்பட்டது.
இந்த உட்கட்சி விவகாரங்கள் உச்சமடைந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அதிமுக துணை பொதுசெயலாளர் கே.பி.முனுசாமி எஸ்.பி வேலுமணி மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையில் அவர் ஈடுபட்டுள்ளார்.
Related posts
Click to comment