இந்திய மக்கள் அனைவருக்கும் அம்பலம் புலனாய்வு செய்தி இணையதளத்தின் வாயிலாக இனிய சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்கள் தியாகிகள் தங்கள் இன்னுயிரை விலையாக கொடுத்து பெற்றுக்கொடுத்த, இந்த இனிய சுதந்திர தின நாளில் அவர்களை மனமாற நினைவு கூர்வோம்.
இந்த 79 வது சுதந்திர தின நாளில் நமது உரிமைகளுக்கும் ஜனநாயகத்தின் உரிமைக்கும் தேர்தல் ஆணையத்துடன் போராடிக் கொண்டிருக்கிறோம். நமது அரசியல் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. பீகாரில் 65 லட்சம் வாக்காளர்களின் நிலை நாம் அறிந்ததே. உச்சநீதிமன்றம் ஜனநாயகத்தை காப்பாற்ற முனைந்திருக்கிறது.
வேலையில்லா திண்டாட்டத்தால், ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு வேலை தேடி செல்லும் அவலம் குறித்த சிந்தனை அந்த மாநில அரசுக்கோ மத்திய அரசுக்கோ இல்லை. சொந்த மண்ணில் அவர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுப்பதற்கு மாறாக, பிழைப்புக்காக இடம் மாறிய அடித்தட்டு மக்களின் வாக்குகளை தேர்தல் ஆணையத்தின் வாயிலாக பறித்து அவர்களை அகதியாக்க முயற்சிக்கிறது. இடம்பெயர்ந்து சென்ற இடங்களில் அவர்களுக்கு வாக்குரிமை கொடுத்து தங்களின் வாக்கு வங்கியை தூக்கி நிறுத்த முயன்றிருக்கிறது பாஜக அரசு. இதற்கு அந்த மாநில அரசும் வெண்சாமரம் விசியிருக்கிறது.
தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளை தட்டிக்கேட்க உச்சநீதி மன்றத்தின் கதவுகளை தட்ட வேண்டியிருக்கிறது. மக்கள் விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது. இல்லையெனில் நமது சுதந்திரம் நசுக்கப்பட்டுவிடும் என்பதை இந்த சுதந்திர தினநாளில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம். நன்றி..வணக்கம்…
Related posts
Click to comment