பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ரவுடி கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நாகேந்திரன் கல்லீரல் பாதிப்பு காரணமாக, கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வருகிறார். சிறையில் நாகேந்திரனுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று அவருக்கு உரிய சிகிச்சை வழங்க கோரி அவரது மனைவி விசாலாட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. நாகேந்திரனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள, அவரின் குடும்பத்தினர் 3 பேர் கல்லீரல் தானம் செய்ய தயாராக இருப்பதாகவும், அது தொடர்பாக நாகேந்திரன் குடும்பத்தினர் அளித்த விவரங்களை காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், நாகேந்திரன் உடல் நிலை குறித்து வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் நாகேந்திரனை அனுமதித்து, மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் நாகேந்திரனுக்கு கல்லீரல் தானம் செய்ய முன்வந்திருக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களின் உடல் நிலையை பரிசோதிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த பரிசோதனைகளுக்கு பின்னர், நாகேந்திரனை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என சி.எம்.சி மருத்துவர்கள் அறிவுறுத்தினால், நாகேந்திரனுடன் அவருக்கு உதவியாக அவரின் குடும்பத்தினர் ஒருவர் மட்டும் உடனிருக்க அனுமதி அளிக்கப்படுவதாகவும்,, உடன் இருக்கும் குடும்ப உறுப்பினர் அலைபேசி பயன்படுத்த அனுமதி இல்லை என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் வரும் 18 ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
Related posts
Click to comment