தவெக – ஓபிஎஸ் – டிடிவி தினகரன் கூட்டணி உறுதி..? 2026 ல் ஆட்சியை பிடிக்கும் திமுக.!!


வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம், ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியவை கூட்டணி அமைக்க அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது.

எடப்பாடி பழனிச்சாமி அதிமுக ஒருங்கிணைப்பிற்கு ஒத்துவராத நிலையில், செங்கோட்டையன் தவெக பக்கம் தாவிவிட்டார். எடப்பாடி பழனிச்சாமிக்கு பாடம் புகட்டும் நோக்கில் ஓ. பன்னீர்செல்வம் தனது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக தொண்டர்கள் மீட்புக்குழு மாவட்ட செயலாளர்களுடன் யாருடன் கூட்டணி வைக்கலாம் என்று ஆலோசனை நடத்தி பொங்கல் முடிந்தவுடன் தங்களது நிலைப்பாட்டை அறிவிக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆரம்பம் முதலே எடப்பாடி பழனிச்சாமியை முதல் வேட்பாளாராக ஏற்க மாட்டோம் என்று போர்க்கொடி தூக்கிய டிடிவி தினகரன் மறுபக்கம் விஜய்யின் தவெகவை ஆதரித்தே பேசிவந்தார். அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய பின் தவெக தரப்புடன் தொடர்ந்து பேசிவரும் டி. டி. வி. தினகரன் தரப்பு தற்போது முக்குலத்தோர் வாக்கு வங்கி அதிகம் இருக்கும் 10 க்கும் மேற்பட்ட தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்கவேண்டும் என்ற கோரிக்கையை தீவிரமாக முன்வைத்து பேசிவருவதாக கூறப்படுகிறது.

தவெக தலைமையில் இந்த கூட்டணி உருவானால் முக்குலத்தோர் வாக்கு வங்கி அதிகமுள்ள தென் தமிழகத்தில் அதிமுக கூட்டணிக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும். செந்தில் பாலாஜி மூலமாக திமுகவின் காய் நகரத்தல்களால் கொங்கு மண்டலத்தில் பின்தங்கி வரும் அதிமுக டெல்டா மாவட்டங்கள் தென் மாவட்டங்களில் அதிமுக பின்தங்கும் சூழலை ஏற்படுத்தும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

கடந்த லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 18% வாக்குகள் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரின் பங்களிப்பால் கிடைத்தது. இந்நிலையில் ஓ. பி. எஸ். டிடிவி தினகரன் இருவரும் அதிமுகவை எதிர்த்து மாற்று கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால் அது அதிமுகவிற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்று அதிமுக தொண்டர்களே கவலை தெரிவிக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகம் பலகீனமாக உள்ள தென்மாவட்டங்களில் செல்வாக்குள்ள நபர்களின் ஆதரவு தேவை. என்கிற அடிப்படையில், முக்குலத்தோர் வாக்குகள் கணிசமாக உள்ள தென் மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்களில் சசிகலா டிடிவி தினகரன் ஆகியோருக்கு நல்ல செல்வாக்கு உள்ள நிலையில் ஓபிஎஸ், டிடிவி ஆகியோரை வைத்து சமாளித்து விடலாம் என்பது தான் விஜயின் திட்டம். இதனால் டிடிவி தினகரனின் கோரிக்கைக்கு தமிழக வெற்றிக் கழகம் சம்மதம் தெரிவித்து விட்டதாகவே சொல்லப்படுகிறது. விரைவில் இது தொடர்பான பேச்சு வார்த்தைகளும் இறுதி செய்யப்பட்டு பொங்கலுக்கு பிறகு கூட்டணி தொடர்பான இறுதி அறிக்கைகள் வெளியாகலாம் என்கின்றனர் தமிழக வெற்றி கழகத்தினர்.

ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இருவரும் செங்கோட்டையன் மூலமாக தவெகவுடன் தொடர்ந்து பேசி வருவதாக கூறப்படுகிறது. இந்த புதிய கூட்டணி உருவாகி, ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தினால், வருகின்ற தேர்தலில் இந்த கூட்டணி மூன்றாம் இடத்தைப் பிடிப்பதை உறுதி செய்ய முடியும். அதே சமயம் மிகப்பெரிய வாக்கு வங்கியான அதிமுகவின் வாக்கு வங்கியை உடைக்கவும் முடியும். தமிழக அரசியலில் செல்வாக்குள்ள 2 2 வது பெரிய கட்சியாக தவெக உருவெடுக்கும். அதே சமயம் விஜய்யின் தமிழக வெற்றி கழகம், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் கூட்டணி அமையுமானால், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி.

– சூர்யா


banner

Related posts

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டது செல்லும் – உயர் நீதிமன்ற கிளை தீர்ப்பு

Ambalam News

டிடிவி தினகரன் அண்ணாமலை சந்திப்பு.! அடுத்த அரசியல் பரபரப்பு..

Ambalam News

இராமநாதபுரத்தில் புதிய விமான நிலையம் அமைக்க மக்கள் எதிர்ப்பு – ஆட்சியரிடம் மனு

Ambalam News

Leave a Comment