1.5 லட்சம் பாகிஸ்தான் மக்களை காப்பாற்றிய இந்தியா.!



நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே சமீபத்தில் தான் போர் நடந்தது. பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு ‛ஆபரேஷன் சிந்தூர்’ மூலமாக நம் நாடு அதிரடி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள், விமானப்படை, ராணுவ தளங்கள் அழிக்கப்பட்டன. இதில் அலறிய பாகிஸ்தான் போரை நிறுத்தும்படி பரிதாபமாக பாகிஸ்தான் கெஞ்சியதால் இந்தியா போரை நிறுத்தியது. இருப்பினும் தொடர்ந்து இந்தியாவை பாகிஸ்தான் சீண்டி வருகிறது. சிந்து நதியில் அணை கட்டினால் ஏவுகணையால் தாக்கி அழிப்போம் என்று அடாவடியாக பாகிஸ்தான் பேசி வருகிறது.
கபாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர் தொடர்ந்து, நம் நாட்டை சீண்டி வருகிறார். சிந்து நதியில் அணை கட்டினால் ஏவுகணைகளை ஏவி தாக்கி அழிப்போம். எங்களிடம் அணு ஆயுதம் உள்ளது. பாகிஸ்தான் அழியும் நிலை வந்தால், அணு ஆயுதங்களை பயன்படுத்தி உலகின் 50 சதவீதத்தை அழித்து விடுவோம் என்று திமிராக பேசினார்
இப்படி பாகிஸ்தான் அட்டூழியம் செய்தாலும் கூட பாகிஸ்தானின் 1.5 லட்சம் மக்களின் உயிர்களை அக்கறையுடன் இந்தியா காப்பாற்றி உள்ளது.
பாகிஸ்தான் எதிரி நாடு தானே என்று நினைக்காமல் தொடர்ந்து இந்தியா கருணை காட்டி வருகிறது. அந்த வகையில், பாகிஸ்தானில் 1.50 லட்சம் மக்களின் உயிர்களை இந்தியா காப்பாற்றி உள்ளது.
வடமாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. காஷ்மீரிலும் மேகவெடிப்பு ஏற்பட்டு அவ்வப்போது கனமழை கொட்டி வருகிறது. இதனால் சட்லஜ், ரவி, செனாப் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குறிப்பாக ரவி ஆற்றில் வெள்ளம் அதிகரித்துள்ளது. இந்த ஆறுகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் மகாணம் வழியாக கடலுக்கு செல்கிறது. நம் நாட்டில் பெய்த கனமழையால் வெள்ளம் கரைபுரண்ட நிலையில், அதுபற்றி பாகிஸ்தானுக்கு மத்திய அரசு எச்சரிக்கை அறிவிப்பு செய்தது.
பாகிஸ்தானில் உள்ள இந்திய துாதரகம் மூலம் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர். அதாவது ரவி ஆற்றின் குறுக்கே உள்ள தெயின் அணை மற்றும் மத்பூர் அணைகள் முழு கொள்ளவை எட்டுவதால், அணை மதகுகளிலும் தண்ணீர் திறக்கப்படும் என்றும், மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற வேண்டும் என்றும் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பஹவல்பூர், கசூர் ஆகிய பகுதிகளிலிருந்து 1 லட்சத்துக்கும் மேற்பட்டோரை, பாகிஸ்தான் பேரிடர் மீட்பு படையினர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினர். மொத்தம் 1.5 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
பாகிஸ்தானுடன் இருக்கும் மோதல் போக்கை மனதில் வைத்துக்கொண்டு, அலர்ட் செய்யாமல் தண்ணீரை திறந்து விட்டு இருந்தால், லட்சக்கணக்கான மக்கள் பிதிப்படைந்து இருப்பார்கள். ஆனால் எதிரி நாடாக இருந்தாலும் கூட அந்த நாட்டு மக்களின் உயிர் முக்கியம் என்ற அடிப்படையில் எச்சரிக்கை செய்து முன்கூட்டியே மக்களை வெளியேற்றி 1.50 லட்சம் பாகிஸ்தான் மக்களின் உயிரை காப்பாற்றி உள்ளது. நம் நாட்டின் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.


banner

Related posts

மும்மொழிக் கொள்கையை மாநில அரசுகளே முடிவு செய்யலாம்: ஒன்றிய அரசு அறிவிப்பு

Admin

பெண் சிசுகொலை : கள்ளக்குறிச்சி பகீர்

Ambalam News

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை எதிர்த்த மனு தள்ளுபடி : 1 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு

Ambalam News

Leave a Comment