விஜய் தேவரககொண்டாவின் கிங்டம் படத்திற்கு வைகோ கண்டனம்


அண்மையில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான தெலுங்கு திரைப்படமான கிங்டம் திரைப்படத்தில் ஈழத்தமிழர்களின் போராட்டத்தையும் வலிகளையும் இழிவுப்படுத்தும் வகையிலான காட்சிகளைக் கொண்டுள்ளதாக அப்படத்திற்கு எதிர்ப்புக்குரல் கிளம்பியிருக்கிறது. கிங்டம் திரைப்படத்தை தமிழ் மண்ணில் திரையிடக்கூடாது என்று கண்டனக்குரல்கள் எழுந்துள்ளது.
இலங்கையில் சிங்கள அரசுசுக்கு எதிரான வீரம் செறிந்த ஈழ விடுதலைப் போராட்டத்தையும் ஈழத் தமிழர்களையும் தவறாக சித்தரித்து திரைப்படங்கள் வெளியிட்டு வரலாற்றை சிதைக்கின்ற முயற்சி கடும் கண்டனத்திற்குரியதாகும். எனவே, தமிழ்நாட்டில் கிங்டம் தெலுங்கு திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று மதி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.


மதி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள தனது அறிக்கையில், ‘’நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வௌளியான தெலுங்கு திரைப்படமான கிங்டம், ஈழத்தமிழர்களை மிக மோசமாக சித்தரித்து காட்டுகிறது. இந்தியாவிலிருந்து இலங்கைக்கு குடிபெயர்ந்து சென்றவர்களை ஈழத்தமிழர்கள் அடிமைகள் போலவும் தீண்ட தகாதவர்களாகவும் நடத்துவது போன்று இத்திரைப்படத்தில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
தங்கள் தாயகத்தின் இறையாண்மையை மீட்டெடுக்க 30 ஆண்டு காலம் தந்தை செல்வா தலைமையில் அறப்போராட்டத்தையும், 30 ஆண்டுகாலம் மாவீரர் திலகம் பிரபாகரன் தலைமையில் மறப் போராட்டத்தையும் நடத்திய ஈழத் தமிழ் மக்கள் அதற்காக கொடுத்த விலை அதிகம். இலட்சக்கணக்கான மக்கள் சிங்கள இன வெறி அரசால் கொன்று குவிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்கள் இன்னுயிரை ஈகம் செய்து இருக்கிறார்கள்.
இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் துணையோடு சிங்கள அரசு தமிழ் இனப்படுகொலையை நடத்தியது. பன்னாட்டு நீதிமன்றத்தில் குற்றக்கூண்டில் கொடியவன் ராஜபக்சே உள்ளிட்ட கும்பலை நிறுத்தி தண்டனை வழங்கி நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று தமிழ்த் தேசிய இனம் போராடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், வீரம் செறிந்த ஈழ விடுதலைப் போராட்டத்தையும், ஈழத் தமிழர்களையும் தவறாக சித்தரித்து திரைப்படங்கள் வெளியிட்டு வரலாற்றை சிதைக்கின்ற முயற்சி கடும் கண்டனத்திற்குரியதாகும். எனவே, தமிழ்நாட்டில் கிங்டம் தெலுங்கு திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.’’ என்று அவர் கூறியுள்ளார்


banner

Related posts

சிறைக்குள் கைதிகளால் தாக்கப்பட்ட ஜெயிலர்

Admin

ஆர்.‌எஸ்.‌எஸ்க்கு எடப்பாடி பழனிச்சாமி சிவப்பு கம்பள வேரவேற்பு கொடுக்கிறார். விஜய் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் – தொல். திருமாவளவன்

Ambalam News

விஜய் மீது நடவடிக்கை? நீலாங்கரை வீட்டில் குவிக்கப்பட்ட போலீஸ்! சென்னையில் பரபரப்பு

Ambalam News

Leave a Comment