திருச்சியில் தவெக விஜய்க்கு தொண்டர்கள் பிரமாண்ட வரவேற்பு..தாமதமாக தொடங்கும் பிரச்சாரம்..



திருச்சி வந்த த.வெ.க. தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். விஜய்யின் இந்த பிரசார பயணத்துக்கு 25 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
த.வெ.க தலைவர் விஜய் தனது முதல் பிரச்சாரத்தை இன்று திருச்சியில் தொடங்கி இருக்கிறார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக அவர் திருச்சி வந்தடைந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவரை பார்ப்பதற்காக, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்திருந்தனர். பலர் தடுப்புகளை தாண்டி செல்ல முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
விமான நிலையத்தில் இருந்து பிரச்சாரம் செயவிருக்கும் காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதிக்கு சாலை மார்க்கமாக பிரச்சார வாகனத்தில் சென்ற விஜய்யை தொண்டர்கள், பொதுமக்கள் மலர்தூவி வரவேற்றனர். பாலக்கரை வழியாக மரக்கடை பகுதிக்கு வரும் விஜய், அங்கு மக்கள் மத்தியில் உரையாற்றவுள்ளார். அவரை பார்க்க ஏராளமான தொண்டர்கள் மற்றும் ரசிகா ரசிகைகள் குவிந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் விஜய் மரக்கடை பகுதிக்குச் செல்ல முடியாத காரணத்தால், அனுமதித்த நேரத்திற்குள் அவர் பேச முடியவில்லை. குறிப்பிட்ட நேரத்தை மீறிப் பேசினால் காவல்துறை வழக்கு பதிவு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரம் மட்டுமே நடிகர் விஜய்யின் வாகனம் நகர்ந்துள்ளதால், அவர் தனது பரப்புரையைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது விஜய்யின் வருகையை எதிர்பார்த்து, தொண்டர்களும் ரசிகர்களும் சாலையின் இருபுறமும் குவிந்துள்ளதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நெரிசலைக் கடந்து, விஜய் தனது வாகனத்தில் திருச்சி மரக்கடைப் பகுதியை நோக்கி மிகவும் மெதுவாகச் சென்று கொண்டிருக்கிறார். இதனால், அவரது திட்டமிடப்பட்ட பரப்புரை நிகழ்வு தாமதமாகத் தொடங்கியுள்ளது.
பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களிலும் பிரசாரத்தை மேற்கொள்கிறார். அரியலூரில் விஜய் பிரசாரத்திற்கு 25 நிபந்தனைகளை விதித்து போலீசார் அனுமதி அளித்துள்ளனர். டிசம்பர் வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் மக்கள் சந்திப்பை நடத்த உள்ளார்.
மக்கள் சந்திப்பு பிரசாரத்திற்காக விஜய் பயன்படுத்தும் நவீன ரக பஸ்ஸில் தொண்டர்கள் யாரும் ஏற முடியாத அளவுக்கு பஸ்சின் மேல் பகுதியில் இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளது. நவீன கேமராக்கள், ஒலிப்பெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளது.
2026 சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில் விஜய்யின் பிரச்சாரம் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.


banner

Related posts

விநாயகர் சிலை ஊர்வலம் – கள்ளக்குறிச்சியில் இந்து முன்னணி பொதுமக்கள் இடையே மோதல்

Ambalam News

புதுச்சேரியில் ரங்கசாமியுடன் தவெக கூட்டணி என்று வதந்தி – புஸ்லி ஆனந்த் அறிக்கை

Ambalam News

அதிமுக எக்ஸ் எம்.பி.மைத்ரேயன் திமுகவில் இணைந்தார்.? அடுத்தடுத்த விக்கெட்டுகள் விழும் என்று திமுகவினர் கருத்து.

Ambalam News

Leave a Comment