அரசு தாய் சேய் நல மையத்தில் கர்ப்பிணிகளுக்கு போடப்பட்ட ஊசி.. கர்ப்பிணிகளுக்கு உடல் நடுக்கம்..காய்ச்சல்..சீர்காழியில் பரபரப்பு..


சீர்காழி அரசு அரசு தாய் சேய் நல மையத்தில் சிகிச்சை பெற்றுவந்த கர்ப்பிணி பெண்கள் மற்றும் பிரசவித்த தாய்மார்களுக்கு செலுத்தப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி ஊசியால் அவர்களுக்கு திடீர் உடல் நடுக்கம் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இதையடுத்து அவர்களுக்கு திடீரென நடுக்கம் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. கர்ப்பிணிகள் வார்டுக்கு வந்த மருத்துவர்கள் அவர்களுக்கு விரைந்து மாற்று மருந்து கொடுத்தனர். இதையடுத்து, சிறிது நேரத்தில் 30-க்கும் மேற்பட்டோரின் , உடல்நிலை சீராகியது. இருப்பினும், 2-க்கும் மேற்பட்டோர் மட்டும் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்
இது தொடர்பாக அமமுக கட்சி தலைவர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது..

சீர்காழி அரசு தாய் சேய் நல மையத்தில் சிகிச்சை பெற்றுவந்த கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பிரசவித்த தாய்மார்களுக்கு திடீர் உடல்நலக்குறைவு – கர்ப்பிணிப் பெண்களுக்குச் செலுத்தப்பட்ட நோய் எதிர்ப்புச் சக்தி மருந்து குறித்து விரிவான ஆய்வுக்கு உத்தரவிட வேண்டும்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் தாய்சேய் நல மையத்தில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணிப் பெண்கள் மற்றும், பிரசவித்த தாய்மார்களுக்குச் செலுத்தப்பட்ட நோய் எதிர்ப்புச் சக்தி ஊசியால் அவர்களுக்கு திடீர் காய்ச்சல் மற்றும் உடல் நடுக்கம் ஏற்பட்டிருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர்களின் உடல்நலக்குறைவிற்குக் காரணமாகக் கூறப்படும் நோய் எதிர்ப்பு மருந்தை உடனடியாக ஆய்வுக்கு உட்படுத்துவதோடு, தமிழகத்தின் மற்ற அரசு மருத்துவமனைகளுக்கும் அம்மருந்து விநியோகிக்கப் பட்டிருந்தால் அவற்றின் பயன்பாடுகளை உடனடியாக நிறுத்தி வைக்கப்படுவதைத் தமிழக சுகாதாரத்துறை உறுதி செய்ய வேண்டும்.
மேலும், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பிரசவித்த தாய்மார்களுக்கு உரிய மேல் சிகிச்சை வழங்குவதோடு, தமிழகம் முழுவதும் உள்ள அரசு தாய் சேய் நல மையங்களில் அனுமதிக்கப்பட்டிருப்போருக்கு வழங்கப்படும் மருந்துகள் அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்திய பின்பே வழங்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன் என்று கூறியிருக்கிறார்.
அரசு மருத்துவதுறையில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து கொண்டே இருக்கிறது.


banner

Related posts

நடிகர் ரோபோ சங்கர் மரணம்.. அரசியல் கட்சி தலைவர்கள் திரை பிரபலங்கள் இரங்கல்..

Ambalam News

மக்களை சுரண்டும் சுங்கச்சாவடி கட்டண உயர்வு..

Ambalam News

உல்லாசத்துக்கு வா.! பணம் கொடு.. புதுமண பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய 4 பேர் கைது.. முக்கியபுள்ளிகளின் வாரிசுகளுக்கு தொடர்பா.?

Ambalam News

Leave a Comment