நடமாடும் நகைக்கடை என்று கூறப்படும் பிரபல ரௌடி வரிச்சியூர் செல்வம் யூடியூப் சேனல்களில் பரபர பேட்டியளித்துக் கொண்டு சுற்றி வந்தார். மதுரையில் தனது தந்தையை கொன்றவரை பழிதீர்க்க கையில் ஆயுதமெடுத்த வரிச்சியூர் செல்வம் அதன் பின் பல வழக்குகளில் சிக்கி சிறைச்சாலையின் செல்லப்பிள்ளையாக மாறினார்.
சமீபத்தில், தனது கூட்டாளி செந்தில் குமாரை தீர்த்துக்கட்டி தாமிரபரணி ஆற்றில் வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டார். இப்படி ரவுடிகள் பட்டியலில் இடம் பிடித்த வரிச்சூயூர் செல்வம், பின்னர் கொலை சம்பவத்தில் ஈடுபடுவதை மட்டும் நிறுத்தி விட்டு ஆட்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட க்ரைம் சம்பவங்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார். 56 முறை சிறைக்கு சென்று வந்த வரிச்சியூர் செல்வம் தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன், கோவை மாநகரில் கட்டப்பஞ்சாயத்திற்காக தனது ஆதரவாளர்களுடன் ஆயுதங்களுடன் வரிச்சியூர் செல்வம் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் வெளியானது.
மேலும், கோவை மாநகரின் செல்வபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் இரவு நேரத்தில் போலீஸ் சோதனை நடத்தினர். அசம்பாவிதங்கள் நிகழும் முன்னர் வரிச்சியூர் செல்வத்தை பிடிக்கவும், தேவைப்பட்டால் காலில் சுட்டு பிடிக்கவும் காவல் துறையினருக்கு உயரதிகாரிகள் அறிவுறுத்தியதாகவும் தகவல் வெளியானது.
இந்த தகவல் வெளியானதும் செய்தியாளர்களைச் சந்தித்த வரிச்சியூர் செல்வம், “நான் கோவைக்கு சென்று 13 ஆண்டுகளாகிவிட்டது. மதுரை சிபிசிஐடி காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் தான் உள்ளேன். நான் எங்கு சென்றாலும் காவல்துறையினருக்கு கட்டுப்பட்டு நல்ல பிள்ளையாக வாழ்ந்து வருகிறேன்.” என்று தன்னிலை விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், வழக்கு ஒன்றில், பிடிவாரண்டு இருந்து வந்த நிலையில், வத்தலகுண்டு பகுதியில் பதுங்கி இருந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை திண்டுக்கல் நகர் வடக்கு காவல் ஆய்வாளர் வெங்கடாசலம் தலைமையில் காவல்துறையினர் அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். மேலும், வரிச்சியூர் செல்வத்திடம் தீவிரமாக விசாரணை நடத்தபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. வருகின்றனர்.
Related posts
Click to comment