தூத்துக்குடியைச் சேர்ந்த கவின், நெல்லையில், வைத்து கடந்த 27ம் தேதி காதல் விவகாரத்தில். காதலியின் தம்பி சுர்ஜித்தால் கொடூரமாக வெட்டி ஆணவக் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில், கொலையாளி சுர்ஜித் மற்றும் காவல் உதவி ஆய்வாளரான அவரது தந்தை சரவணன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், சி.பி.சி.ஐ.டி போலீசார் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதையடுத்து இருவரையும் காவலில் எடுத்த நெல்லை சி.பி.சி.ஐ.டி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார் நவராஜ் தலைமையிலான சி.பி.சி.ஐ.டி போலீசார் காலை ஆறு மணி முதல், விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு டீமாக செயல்பட்ட சி.பி.சி.ஐ.டி போலீசார் சுர்ஜித் மற்றும் அவரது தந்தையிடம் சம்பவம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளனர். சுர்ஜித், அவரது தந்தை சரவணன் ஆகியோரின் பதில்களை வீடியோ ஆதாரமாக பதிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Related posts
Click to comment