திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் மத்திய அரசை கண்டித்து, ஆகஸ்ட் 29 முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சசிகாந்த் செந்தில் எம்பிக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் நேற்று திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று 3 ஆவது நாளாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் மருத்துவ சிகிச்சையில் இருந்தபடியே தனது உண்ணாவிரதத்தை தொடர்கிறார்.
தமிழகத்திற்கான கல்வி நிதி ரூ 2,152 கோடியை மத்திய அரசு வழங்காததை கண்டித்து திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் நேற்று முன் தினம் முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
திருவள்ளூரில் நேற்று அவர் 2ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், சசிகாந்த் செந்தில் எம்பிக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, ரத்த அழுத்தம் குறைந்ததால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து சசிகாந்த் செந்தில் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
அந்த வகையில் 3 வது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சைக்கு பிறகு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், உண்ணாவிரதத்தை கைவிடுமாறு மருத்துவர்கள் கூறிய அறிவுறுத்தலை ஏற்க மறுத்த சசிகாந்த் செந்தில் மருத்துவமனை சிகிச்சையில் இருந்தபடியே தனது உண்ணாவிரத்தை மேற்கொண்டு வருகிறார். இதன் காரணமாக மருத்துவர்கள் தொடர்ந்து சசிகாந்த் செந்திலுக்கு சிகிச்சையளித்து கண்காணித்து வருகின்றனர்.