‘’உங்களுடன் ஸ்டாலின்’’ முகாமில் அதிகாரிகளுடன் அடிதடி – சிகிச்சையில் இருப்பவரை கைது செய்ய போலீஸ் தீவிரம்.?



ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு ஒன்றியம் முத்துப்பேட்டை கிராமத்தில், சில வாரங்களுக்கு முன்பு நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அதே கிராமத்தை சேர்ந்த வெங்கடபதி என்ற முதியவர் மனு அளித்திருந்தார். தனது மனு மீது பல நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில்; சாத்தூர் கிராமத்தில் இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ‘’உங்களுடன் ஸ்டாலின்’’ முகாமுக்கு சென்ற முதியவர் வெங்கடபதி முகாமில் மனுக்களை பெற்றுக்கொண்டிருந்த அதிகாரிகளிடம், தனது மனு மீது என் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தனது மனுவிற்கு ஒப்புகை சீட்டு வழங்க கோரியிருக்கிறார்.
இதனால் கோபமடைந்த கிராம நிர்வாக அலுவலர் ஷாபுதீனும், அங்கிருந்த மற்ற அதிகாரிகளும் சமூக ஆர்வலர் வெங்கடபதியை அடித்து உதைத்ததோடு, காவல் துறையினரை அழைத்துள்ளனனர். உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் பிரபாகரன் முதியவர் பிரபாகரனை தாக்கி துரத்தியிருக்கிறார்.
மேலும் முதியவர் வெங்கடபதி ஆக்கிரமிக்கப்பட்ட அரசு வனநிலத்தை மீட்க கோரி மனு கொடுத்திருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னனியில் பல விஷயங்கள் மறைந்திருப்பதாக கூறுகின்றனர்.
முதியவர் வெங்கடபதியை காவல் உதவி ஆய்வாளர் பிரபாகரன் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வந்த நிலையில், தாக்குதலுக்குள்ளான வெங்கடபதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றி, கைது செய்ய ராணிப்பேட்டை காவல்துறையினர் முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. சமூக ஆர்வளரான வெங்கடபதியை கைது செய்யக்கோரி, கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் போராட்டம் நடத்தியிருக்கின்றனர். விரைவில் வெங்கடபதியை கைது செய்யப்படுவார் என்று கோட்டாட்சியர் உறுதியளித்ததை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டதாக கூறப்படுகிறது.
அந்த சமூக ஆர்வலர் என்ன மனு கொடுத்திருந்தார்.? ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.? எதற்காக அடித்துக்கொண்டார்கள்.? என்று இரு தரப்புமே தெரிவிக்காமல் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் விசாரித்து நடவடிக்கை எடுத்தால் பல உண்மைகள் வெளிவரும் என்கின்றனர் விபரமறிந்தவர்கள். மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா.?


banner

Related posts

பட்டா மாறுதலுக்கு லஞ்சம் – கையும் களவுமாக சிக்கிய விஏஓ கைது

Admin

கரூர் துயர சம்பவ சிறப்பு புலனாய்வு விசாரணை குழுவில் நாமக்கல் எஸ்.பி.விமலா, திருச்சி சி.எஸ்.சி.ஐ.டி எஸ்.பி.ஷியமளா தேவி

Ambalam News

கல்குவாரி லாரிகள் அட்டகாசம்..கண்டுகொள்ளாத காஞ்சிபுரம் போலீஸ்..

Ambalam News

Leave a Comment