இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டக்குழுவின் 25வது மாநாடு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கட்சியின் மாநில துணைச்செயலாளர் வீரபாண்டியன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். மூத்த உறுப்பினர் ராஜகோபால் கட்சி கொடியை ஏற்றினார். இக்கூட்டத்தில் காஞ்சிபுரத்தில் வேளாண்மை பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் மின் கணக்கீடு மாதந்தோறும் எடுப்பது. பாலாற்றில் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதை தடுப்பது மற்றும் பாலாற்றில் 3 கி.மீக்கு ஒரு தடுப்பணை அமைப்பது உட்பட்ட மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-நாகராஜன்