தீர்ப்பைக் கேட்டதும் சிறுமி தற்கொலை முயற்சி : சென்னை உயர் நீதிமன்றத்தில் பரபரப்பு


சென்னை உயர் நீதிமன்றத்தில், விசாரணைக்கு ஆஜராகி இருந்த 15 வயது சிறுமி நீதிமன்ற மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம், உயர் நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்தவர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக அந்தப்பெண் உயிர் பிழைத்துள்ளார். அந்த பெண்ணை மீட்ட காவலர்கள் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் குடும்பப் பிரச்னை தொடர்பாக ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டு, அந்த மனுவின் மீது வழக்கு விசாரணை நடந்து வந்தது.
தாய் தந்தை இருவருக்குமான கருத்து வேறுபாட்டால், இருவரும் பிரித்து தனித்தனியாக வசித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. தந்தை நீலாங்கரையை சேர்ந்தவர் என்றும் தாய் அந்தமானை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. இந்த வழக்கில், கருத்து வேறுபாட்டால் தம்படியர் பிரிந்திருந்த நிலையில், தாய் வேறு திருமணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன்காரணமாக, தந்தை தனது மகளான சிறுமியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தந்தையின் சார்பில், ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தாயார் மறுமணம் செய்துள்ள காரணத்தால், சிறுமியை காப்பகத்தில் சேர்க்க உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமி மனமுடைந்து உயர்நீதிமன்றத்தின் முதல் தளத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த சிறுமியை மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும், தமிழக காவல்துறை காவலர்களும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இந்த சம்பவத்தால் பாபபரப்பு நிலவியது


banner

Related posts

கருணாநிதியை போன்று “மூச்சு உள்ளவரை நானே தலைவர்” – பாமக நிறுவனர் ராமதாஸ்

Admin

பாஜகவை ஏற்க தயாராக இல்லை.. உங்கள் கொள்கைகள் வேரறுக்கப்பட வேண்டும் -கர்ஜித்த கனிமொழி

Admin

தவெக விஜய்க்கு சிபிஐ சம்மன் | விரைவில் ஆஜராக உத்தரவு.? பின்னணி என்ன.?

Ambalam News

Leave a Comment