மும்மொழிக் கொள்கையை மாநில அரசுகளே முடிவு செய்யலாம்: ஒன்றிய அரசு அறிவிப்பு
மும்மொழிக் கொள்கைக்கு தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் ஒன்றிய அரசு பின்வாங்கியுள்ளது.
மும்மொழி கல்விக்கொள்கயை திமுக கடுமையாக எதிர்த்து வந்தது. நாடு முழுவதும் பெரும்பான்மையான மக்களும் ஒன்றிய அரசின் மும்மொழிக்கல்வி கொள்கையை கடுமையாக எதிர்த்து வந்தனர்.
இந்நிலையில், மும்மொழிப் பிரச்சினை குறித்து மக்களவையில், தமிழக எம்.பி. மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பினார். மும்மொழிக் கொள்கையை மாநில அரசுகளே முடிவு செய்யலாம் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது என்று மாணிக்கம் தாகூர் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய கல்வித் துறை இணை அமைச்சர் எழுத்துப் பூர்வமாக பதிலளித்துள்ளார்.