ஆப்கானிஸ்தனில் நிலநடுக்கம் 800 பேர் பரிதாப பலி.. 2500 பேர் படுகாயம்.. இந்தியாவின் சில பகுதிகளிலும் நில அதிர்வு.!



பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில், நேற்று நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் மலைத்தொடரில் உள்ள அசதாபாத் பகுதியை மையமாகக் கொண்டு, சுமார் 29 கிலோமீட்டர் ஆழத்தில் உருவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து மேலும் பலமுறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இந்தியாவின் சில பகுதிகளிலும் உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில்தான் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையை மையமாகக் கொண்டு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 800 பேர் பலியான நிலையில் 2500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
குனார் மாகாணத்தில் மூன்று கிராமங்கள் முழுமையாக அழிந்துள்ளன. மண் மற்றும் கற்களால் கட்டப்பட்ட பல வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.
உயிரிழப்புகளின் எண்ணிக்கை இன்னும் உயரலாம் என்று உள்நாட்டு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல் மதின் கனி தெரிவித்துள்ளார்.
குனார், நங்கர்ஹர் மற்றும் காபூல் ஆகிய இடங்களில் இருந்து மீட்புக் குழுக்கள் பாதிக்கப்பட்ட தொலைதூரப் பகுதிகளுக்கு விரைந்துள்ளன.

இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், லாகூர், பெஷாவர் மற்றும் இந்தியாவின் டெல்லி, பஞ்சாப், அரியானா, ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட வட மாநிலங்கள் மற்றும் தஜிகிஸ்தானின் சில பகுதிகளிலும் கடுமையான நில அதிர்வுகள் உணரப்பட்டன.சுமார் 5 முதல் 7 விநாடிகள் வரை பூமி அதிர்ந்ததால் பீதியடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகலிக்கு ஓடிவந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த புள்ளிவிபரங்கள் உடனடித் தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாக வில்லை.
இருப்பினும், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையில் 800 பேர் பலியானதாகவும், 2500 கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், தங்கள் வீடுகளில் மின்விசிறிகள் மற்றும் நாற்காலிகள் போன்றவை பயங்கரமாக ஆடிய காணொளிகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். மேலும், தொடர்ச்சியான நில அதிர்வுகள் ஏற்பட்ட வாய்ப்புள்ளதால், மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் ஒரு நில அதிர்வு மண்டலத்தில் அமைந்துள்ளது.
இதனால் இங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
இதற்கு முன், கடந்த அக்டோபர் 2023 இல் ஏற்பட்ட 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 4,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது


banner

Related posts

தமிழ்நாட்டில் ஏழு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்.! தமிழ்நாடு அரசு உத்தரவு

Ambalam News

திருச்சி மத்திய சிறை காவலர்கள் 20பேர் மீது வழக்குப்பதிவு – விலகாத மத்திய சிறையின் மர்மங்கள்

Ambalam News

கொலை செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ. சண்முகவேல் குடும்பத்திற்கு 1 கோடி நிவாரண தொகை – டி.ஜி.பி. சங்கர் ஜிவால் நேரில் அஞ்சலி

Ambalam News

Leave a Comment