ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் ஒபிஎஸ்சிடம் இருத்த முதல்வர் பதவியை எடப்பாடி பழனிச்சாமிக்கு பெற்று கொடுத்தார் சசிகலா. இதன்பின்னர், சசிகலாவை தூக்கியெறிந்த எடப்பாடி பழனிச்சாமி, ஒபிஎஸ்சை கட்சிக்குள் கட்டம் கட்டி வெளியேற்றினார். இதன் பின்னர், ‘’அதிமுக தொண்டர்கள் உரிமைமீட்பு குழு’’ என்ற பெயரில் தனி அணியாக ஒபிஎஸ் செயல்பட்டு வருகிறார். ஒபிஎஸ் – இபிஎஸ் மோதல் இன்றுவரை அதிமுக தொண்டர்களால் பேசப்பட்டு வருகிறது. அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் இரு அணிகளியும் ஒன்று சேர்த்துவிட முயன்றும் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.
இந்நிலையில் தென்காசி மாவட்டம் நெற்கட்டும்சேவலில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவர்.., அதிமுக அணிகள் இணையவேண்டும் என்ற சசிகலாவின் கருத்தை வரவேற்கிறேன் பிரிந்து கிடக்கும் சக்தியை ஒன்றுசேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறேன் என்று கூறியதோடு, வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.
அப்போது சட்டசபை தேர்தலில் விஜய்யுடன் கூட்டணி வைப்பீர்களா.? என்ற கேள்விக்கு பதிலளித்த ஒபிஎஸ், ‘’எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்’’ என்று கூறியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி முதுகில் குத்திவிட்டதாக பிரேமலதா கூறியதற்கு அதிலேயே விளக்கம் இருக்கிறது என்று கூறி சென்றுள்ளார்.
Related posts
Click to comment