அஜித் குமார் ‘’லாக்கப் டெத்’’ வழக்கு – தனிப்படை போலீசாரை சி.பி.ஐ கஷ்டடியில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி


அஜித் குமார் ‘’லாக்கப் டெத்’’ வழக்கு – தனிப்படை போலீசாரை சி.பி.ஐ விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கோவில் காவலர் அஜித்குமார் போலீசார் தாக்கியதில் மரணம் அடைந்தார். தமிழகத்தையே உலுக்கிய இந்த கொடூர கொலை சம்பவத்துக்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனகுரல்கள் எழுந்தது. இந்த விவகாரத்தில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் சிவகங்கை மாவட்ட எஸ்.பி-யாக இருந்த ஆஷிஸ்ராவத் கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். மானாமதுரை டி.எஸ்.பி சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அஜித்குமார் காவல்துறையினரால் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டது மருத்துவ அறிக்கையில் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் தலைமையில் விசாரணை நடைபெறுகிறது.
இந்நிலையில், அஜீத்குமார் வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். தற்போது இந்த வழக்கை சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை செய்து வருகிறார்கள். இந்த வழக்கில் தொடர்புடைய 5 தனிப்படை காவலர்களை சி.பி.ஐ காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியது. இது தொடர்பான மனு இன்று மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது 5 காவலர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர்.
தனிப்படை காவலர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன் ஆகிய 5 போரையும் இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ கோரியது. இதையடுத்து, தனிப்படை காவலர்கள் 5 பேரையும் சிபி.ஐ காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது


banner

Related posts

சென்னையில் நடந்த பகீர் கொள்ளை சம்பவங்கள்.! குற்றவாளிகளுடன் வழக்கறிஞர் கைது.! பரபரப்பு..

Ambalam News

இசைஞானிக்கு பாராட்டு விழா, நினைவு பரிசு – முதல்வரை கொண்டாடும் ராஜாவின் ரசிகர்கள்.. இளையராஜாவுக்கு ‘பாரத ரத்னா’ வழங்க வேண்டும் – முதல்வர் முக. ஸ்டாலின் கோரிக்கை

Ambalam News

விஜய்யிடம் பேசிய ராகுல்காந்தி.. காங்கிரஸுடன் தவெக கூட்டணி.? விஜய் மிரட்டப்பட்டாரா.? கரூர் வரும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே. சி வேணுகோபால்

Ambalam News

Leave a Comment