தமிழக அரசின் எரிசக்திதுரை செயலாளர் பீலா ராஜேஷ் கடந்த 2 மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்
பீலா வெங்கடேசன் 1997 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான இவர் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார். இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாழையடி பகுதி. இவரின் தந்தை எல்.என்.வெங்கடேசன், தமிழக காவல்துறை டி.ஜி.பி.யாக பதவி வகித்து ஓய்வுபெற்றவர். தாய் ராணி வெங்கடேசன் சாத்தான்குளம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர்கள் சென்னையில் செட்டிலாகி விட்டனர்.
பீலா வெங்கடேசன் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் தாஸ் என்பவரை 1992-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ராஜேஷ் தாஸ் தமிழக காவல்துறையின் சிறப்பு டி.ஜி.பி.,யாக பணியாற்றிவர்.
முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவரை கடந்த 2023 ஆம் ஆண்டு பிரிந்தார். கொரோனா நோய் தொற்று காலத்தில் சுகாதாரத் துறை செயலாளராக சிறப்பாக பணியாற்றிய பீலா, பின்னர் எரிசக்தி துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முதன்மை செயலாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளராகவும் நியமனம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக பீலா வெங்கடேசன் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்
Related posts
Click to comment