
2025 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை நாம் அக்டோபர் 20 அன்று கொண்டாடி மகிழந்தோம் ஆனால் திருவள்ளூர் மாவட்டம் பட்டறைப்பெரும்புதூர் செந்தில்குமார் கல்வி அறக்கட்டளை சார்பில் அறக்கட்டளை மாணவ மாணவியர் மூன்று தினங்களுக்கு முன்னரே கொண்டாடி மகிழந்திருக்கின்றனர்.
தமிழக காவல்துறையில் காவல் ஆய்வாளராக பணிபுரியும் திரு. மணிமனோகரன் அவர்களாலும் அவரது மனைவி அவர்களாலும் திருவள்ளூர் மாவட்டம் பட்டறைப்பெரும்புதூரில் நடத்தப்பட்டு வரும் செந்தில்குமார் அறக்கட்டளை ஏழை எளிய மாணவ மாணவியர்களின் கற்றல் திறனை அதிகரிக்கும் நோக்கிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதத்திலும் மாலை 5 மணி முதல் இரவு எட்டு மணிவரை சிறப்பான ஆசிரியர்களை கொண்டு சிறப்பு வகுப்புகளை எடுத்து மாணவ மாணவியர்களுக்கு வழிகாட்டி வருகின்றனர்.

மாணவர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த சிற்றுண்டிகள் மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கும் விதத்தில் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா என்று மாணவர்களை அரவணைத்து அவர்களின் தேவைகளை எவ்வித கட்டணமும் இன்றி நிறைவேற்றி வருகிறது ஆய்வாளர் மணி மனோகரனின் செந்தில்குமார் கல்வி அறக்கட்டளை.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை தீபாவளிக்கு இரு தினங்களுக்கு முன்னரே சிறப்பு மாணவ மாணவியர்களுடன் செந்தில்குமார் அறக்கட்டளை வளாகத்தில் பாதுகாப்புடன் கொண்டாடி, மாணவ மாணவியற்கு இனிப்புகள் பட்டாசுகள் அனைத்தையும் வழங்கி மகிழ்ந்திருக்கிறார் ஆய்வாளர் மணிமனோகரன்.
மாணவ மாணவியற்கு கல்வி உட்பட அவர்களுக்கு தேவையான கல்வி உதவிகளையும் எவ்வித கட்டணமும் இன்றி வழங்கி வரும் செந்தில்குமார் கல்வி அறக்கட்டளை ”கல்வி ஒரு வரம் கற்றுக்கொடுப்பது தொழிலல்ல தவம்” என்ற ஆய்வாளர் மணிமனோகரன் அவர்களின் வாசகத்திற்கு ஏற்ப சிறப்பாக கல்வி தொண்டாற்றி வளர்ந்து வருகிறது