தூய்மைப்பணியாளர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 11 வது நாளாக போராட்டகளத்தில் நிற்கின்றனர். பலகட்ட பேச்சுவார்த்தைகளிலும் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. பிரபல அரசியல் பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் தூய்மைப்பணியாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
தூய்மைப்பணியாளர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று 11 வது நாளாக போராட்டம் தொடருகின்ற சூழலில், சென்னை பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் அவர்களை தூய்மைப்பணியாளர்கள் சந்தித்து உரையாடியுள்ளனர். அவர்களது குறைகளை விஜய் கேட்டறிந்துள்ளார். தூய்மைப்பணியாளர்களுடன் நிற்பதாக உறுதியளித்துள்ளார்

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி அதிமுக ஆட்சியில் 17,000 தூய்மைபணியாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட்டனர். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் தூய்மைப்பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று கூறினார். மேலும் அரசு தூய்மைப்பணியாளர்கள் விவகாரத்தில் உரிய பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரத்தில் அரசு உரிய முடிவினை எடுத்து தூய்மைப்பணியாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருமா.?