இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் காடுகள் மற்றும் குகைகளில் ஒளிந்துகொண்டு அவ்வப்போது, பல தாக்குதல்களை நடத்தி வருவது நாம் அறிந்ததே..
இந்நிலையில், தீவிரவாதிகள் அடந்த வனப்பகுதியில் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை வாயிலாக, ராணுவத்திற்கு தகவல் கிடைத்ததை அடுத்து, கடந்த ஆகஸ்ட் 1 இம் தேதியன்று ‘’ஆபரேஷன் அகால்’’ என்ற பெயரில் ராணுவம் தனது அதிரடி தேடுதல் வேட்டையை தொடங்கியது. அப்போது ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், நேற்று குல்காம் மாவட்டத்தில் அகால் வனப்பகுதியில் இராணுவத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில், லான்ஸ் நாயக் மற்றும் பிரீத்பால் சிங் ஆகிய இரு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
10 வது நாளான இன்று குல்காம் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கி சண்டையில், ஒரு பயங்கர வாதியை ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. தீவிரவாதிகளுக்கெதிரான ஆபரேஷன் அகால் நடவடிக்கையில் இதுவரை 10 பாதுகாப்புபடை வீரர்கள் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து தீவிரவாதிகளை தேடும் தேடுதல் வேட்டை தொடர்ந்து வருகிறது.
தீவிரவாதிகளுடனான சண்டையில் வீரமரணமடைந்த 2 ராணுவ வீரர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை இராணுவம் தெரிவித்தது. மேலும், அவர்களுடைய தைரியம் மற்றும் அர்ப்பணிப்பு எங்களுக்கு உந்துதலாக இருக்கும் என்றும் இராணுவம் தெரிவித்துள்ளது.
Related posts
Click to comment