“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் திமுக அரசை போல பொய்யான வாக்குறுதிகளை கொடுக்கமாட்டோம்” – நாமக்கல் பிரச்சாரத்தில் தவெக விஜய்


திமுகவும் பாஜகவும் மறைமுக கூட்டணியில் இருப்பதாக குற்றம்சாட்டி, அதிமுக-பாஜக கூட்டணியில் நம்பிக்கை இல்லை எனவும், பாசிச பாஜக அரசுடன் நாங்கள் என்றும் ஒத்துப்போக மாட்டோம் மக்கள் யோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று நாமக்கல் தேர்தல் பரப்புரையில் திமுக அதிமுக பாஜக காட்சிகளை விமர்சித்து தவெக விஜய் பேசியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நாமக்கல் மாவட்டத்தில் இன்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். பரப்புரையில் “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் திமுக அரசை போல பொய்யான வாக்குறுதிகளை கொடுக்கமாட்டோம். புதுசா சொல்லுங்க என்கிறார்கள். என்ன சொல்வது, செவ்வாய் கிரகத்தில் ஐடி பார்க், காற்றில் கல் வீடு கட்டப்பட்டும், அமெரிக்காவுக்கு ஒற்றையடி பாதை, வீட்டுக்குள் விமானம் ஓட்டப்படும் என அடித்துவிட முடியுமா? நமது முதல்வர் அடித்து விடுவாரே அப்படி அடித்து விடுவோமா?
பாசிச பாஜக அரசாங்கத்துடன் நாங்கள் என்றும் ஒத்துப்போக மாட்டோம். திமுகவை போல பாஜகவுடன் மறைமுக உறவில் இருக்க மாட்டோம். மூச்சுக்கு 300 தடவை அம்மா என்று சொல்லிக்கொண்டு, ஜெயலலிதா சொன்ன விஷயத்தை முழுமையாக மறந்துவிட்டு, பொருந்தா கூட்டணியாக ஒரு கூட்டணியை அமைத்துக்கொண்டு, தமிழ்நாட்டு நலனுக்காக கூட்டணி வைத்துள்ளோம் என்று சொல்கிறார்களே அவர்களை போலவும் நாங்கள் இருக்க மாட்டோம்.

இந்த பாஜக அரசு தமிழகத்துக்கு என்ன செய்துவிட்டார்கள்? நீட்’ டை ஒழித்துவிட்டார்களா? கல்விக்கு தேவையான நிதியை முழுமையாக கொடுத்துவிட்டார்களா? தமிழகத்துக்கு தேவையான விஷயங்களை செய்துவிட்டார்களா? பின்னர் எதுக்கு இந்த சந்தர்பவாத கூட்டணி இதை நான் கேட்கவில்லை, எம்ஜிஆரின் உண்மையான தொண்டர்கள் கேட்கிறார்கள்.

அதிமுக – பாஜக நேரடி உறவுக்காரர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர்களின் கூட்டணியில் நம்பிக்கையில்லை என்பது தெரியும். அதே சமயம், திமுக குடும்பம், பாஜகவுடன் மறைமுக கூட்டணியில் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். வரும் தேர்தலில் நீங்கள் திமுகவுக்கு ஓட்டுபோட்டால் அது பாஜகவுக்கு ஓட்டு போடுவது போல. வெளியில் அடித்துகொள்வது போல காட்டிக்கொண்டு மறைமுகமாக கூட்டணியில் இருப்பார்கள். வேண்டாம் மக்களே.. யோசித்து முடிவெடுங்கள். ஒரு கை பாத்துவிடலாம்.. நம்பிக்கையுடன் இருங்கள் மக்களே.. நல்லதே நடக்கும்.. மீண்டும் சந்திக்கும் வரை நன்றி வணக்கம்” என தெரிவித்தார்.

நாமக்கல் பரப்புரையை முடித்துவிட்டு கரூர் வேலுச்சாமிபுரத்தில் தனது பரப்புரையை தொடர, பரமத்தி-வேலாயுதம்பாலையம் – மண் மங்களம் வழியாக கரூர் செல்கிறார்.


banner

Related posts

மூளை அமீபா பாதிப்பு தொற்று நோய் அல்ல.. பராமரிப்பு இல்லாத நீச்சல் குளங்களில் குளிப்பதை தவிர்த்துக் கொள்வது நல்லது – பதற்றம் வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Ambalam News

திருச்சியில் விரைவில் ஆம்னி பேருந்து நிலையம் திறக்கப்படும் – அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் நேரில் ஆய்வு

Ambalam News

எடப்பாடி பழனிச்சாமியுடன் மல்லுக்கட்டு – ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை.!?

Ambalam News

Leave a Comment