தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல விதித்த நிபந்தனைகளை மாற்றி அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், அசோக்குமாரின் பயண திட்டங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவிருக்கிறார். அவர் அமெரிக்கா செல்வதற்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மாற்றி அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதய சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதிக்க கோரி, செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார் மனு தாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த உயர் நீதிமன்றம், பல்வேறு நிபந்தனைகளுடன் அமெரிக்கா செல்ல அனுமதி அளித்தது. இந்நிலையில், அனுமதி உத்தரவை மாற்றி அமைக்கக் கோரி அசோக்குமார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அமெரிக்காவுக்கு தன்னுடன் தனது மனைவிக்கு பதிலாக மகள் வர உள்ளதாகவும், பயண தேதியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மாற்றங்களுக்கு அனுமதிக்குமாறு அசோக்குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், அமெரிக்கா சென்ற பின், இந்திய தூதரகத்திற்கு நேரில் சென்று தகவல் தெரிவிப்பதற்குப் மாற்றாக, மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்க அனுமதிக்குமாறு கோரப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள், அசோக்குமார் அமெரிக்கா செல்வதற்கான நிபந்தனைகளை மாற்றியமைத்து உத்தரவிட்டனர்.
Related posts
Click to comment