மோடியா.? லேடியா.? என்று முழங்கிய ஜெயலலிதாவின் அதிமுக ‘அண்ணன் அமித்ஷா சொல்கிறபடி நடப்போம்’ என்ற பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது – மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்..


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் இருந்து வெளியேறிய ஓ.பன்னெர்செல்வம் டிடிவி தினகரன் முதல் தற்போது கலகக் குரல் எழுப்பிய செங்கோட்டையன் முதல் அதிமுகவின் உட்கட்சி பிரச்னையை தீர்க்க டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்திப்பது வாடிக்கையாகி விட்டது. அதிமுக தொண்டர்கள் முதல் பொதுமக்கள் அரசியல் பார்வையாளர்கள் என அனைவருமே அதிமுக தலைவர்களின் போக்கை விமர்சித்து வருகின்றனர்.
2026 சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், அதிமுகவின் உட்கட்சி பூசல் தமிழக அரசியல் கள ஆட்டத்தை எந்நேரமும் மாற்றும் என்ற அளவுக்கு தமிழக அரசியலை கொதி நிலையில் வைத்திருக்கிறத
திமுக கூட்டணி தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியும், அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியும் களம் காண்கின்றன. நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி என்று அறிவித்துவிட்டனர். தவெக சார்பில் கூட்டணி அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
திமுக கூட்டணியுடன் ஒப்பிடும்போது, அதிமுக – பாஜக கூட்டணி பலமிழந்து நிற்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளகள். மறுபக்கம் அதிமுக கூட்டணியில் தினசரி பல்வேறு பிரச்சனைகள் வெடித்து கொண்டிருக்கிறது. கூட்டணியில் இருந்து வெளியேற்றம் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி. தினகரன் கூட்டணியில் இருந்து வெளியேறியது, பிரிந்தவர்களை ஒன்றிணைக்க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்தது, தொடர்ந்து அவர் கட்சிப் பொறுப்புகளில் பறிக்கப்பட்டது என அதிரடி திருப்புமுனைகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே, மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். டெல்லி சென்ற செங்கோட்டையன் அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்தது அதிமுகவில் விவாதத்தைக் கிளப்பியது. அதைத் தொடர்ந்து டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமியும் அமித்ஷாவுடன் சந்திப்பு மேற்கொண்டார். எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷா சந்திப்பு தமிழக அரசியல் காலத்தில் பல்வேறு விமர்சனங்களை கிளப்பியது.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தனது எக்ஸ் பக்கத்தில், அதிமுக எத்தனை கோஷ்டிகள் ஆனாலும் அனைத்தையும் பாஜகவே வழிநடத்தும் “அதிமுகவில் ஒவ்வொரு கோஷ்டியும் தனித்தனியாக தில்லி சென்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வருகின்றனர். எனவே பாஜகதான் அதிமுகவை வழி நடத்துகிறது என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு”
“அதிமுக எத்தனை கோஷ்டிகளாக பிரிந்தாலும் அத்தனை கோஷ்டிகளையும் வழிநடத்துவது பாஜகதான்”
மோடியா.? லேடியா.? என்று முழங்கிய ஜெயலலிதாவின் அதிமுக இயக்கம் இன்றைக்கு ‘அண்ணன் அமித்ஷா என்ன சொல்கிறாரோ அதன் படிதான் நடப்போம்’ என்ற பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதைத் தான் இந்த தில்லி சந்திப்புகள் உறுதிப்படுத்துகின்றன. இதைத் தான் இந்த டெல்லி சந்திப்புகள் உறுதிப்படுத்துகின்றன என்று தெரிவித்துள்ளார்.


banner

Related posts

எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷா என்ன பேசினார்கள்.? தமிழக பாஜக தலைவர்களின் முடிவு என்ன.? செங்கோட்டையன் ஓபிஎஸ், டிடிவி.தினகரனின் அடுத்தகட்ட நகர்வுகள்..!! என்ன.?

Ambalam News

ஒன்றிய அரசை கண்டித்து திருப்பூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி போராட்டம்..

Ambalam News

விஜய்யிடம் பேசிய ராகுல்காந்தி.. காங்கிரஸுடன் தவெக கூட்டணி.? விஜய் மிரட்டப்பட்டாரா.? கரூர் வரும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே. சி வேணுகோபால்

Ambalam News

Leave a Comment