
”கல்வி மட்டுமே ஒரு தனி மனிதனின் அழியா செல்வம்” அச்செல்வத்தை அனைவரும் பெற்றிட வேண்டும் என்று அரசுத் துறை நிர்வாகங்கள் எத்தனையோ திட்டங்களை கொண்டுவந்து ஏழை எளிய வீட்டு குழந்தைகளுக்கு கல்வியை உறுதி செய்து வருகிறது.
மாணவர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு சில தன்னார்வலர்கள் கூட்டாக சேர்ந்தும் தனி நபராகவும் கல்வி தொண்டாற்றி வருகின்றனர். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் பட்டரைப் பெரும்புதூர் பகுதியில் தமிழக காவல் துறையில் ஆய்வாளாரக பணியாற்றும் திரு.மணி மனோகரன் அடித்தட்டு மக்களின் பொருளாதாரத்தை அறிந்து அவர்களின் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க தனி நபராக தனது சொந்த செலவில் செந்தில்குமார் கல்வி அறக்கட்டளை வாயிலாக கட்டணமற்ற கல்வி மையத்தை நடத்தி வருகிறார். இந்த கல்வி மையத்தில் மாலை நேர வகுப்புகள் மற்றும் விடுமுறை நாட்களில் அப்பகுதி மாணவர்களுக்கு சிறந்த ஆசிரியர்கள் வாயிலாக கல்வி கற்பிக்கப்படுகிறது.

மாணவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்கள், நோட்டுகள் கல்வி உபகரணங்கள் போன்றவற்றையும் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த அறக்கட்டளையின் வாயிலாக எண்ணற்ற மாணவர்கள் பயனபெற்று வருகின்றனர். செந்தில்குமார் கல்வி அறக்கட்டளை கட்டணமற்ற கல்வி மைய நிறுவனர் காவல் ஆய்வாளரின் மனைவி திருமதி ஜெயலட்சுமி மணி மனோகரன் அவர்கள் சிறப்பாக முன்னெடுத்து நடத்தி வருகிறார்.
மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு கணினி குறித்த பாடங்கள் செயல்பாடுகளை கற்பிக்கும் சீரிய நோக்கில் 26.12.2025 அன்று மாலை செந்தில்குமார் கல்வி அறக்கட்டளை சார்பில் செந்தில்குமார் கட்டணமற்ற கல்வி மையத்தில் கூடுதலாக மாணவர்களுக்கான கட்டணமற்ற கணினி பயிற்சி மையம் துவக்க விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை சென்னை மண்டல காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.அ.முத்தமிழ் அவர்கள் கலந்துகொண்டு கட்டணமற்ற கணினி பயிற்சி மையத்தை துவக்கி வைத்து, மாணவர்களுக்கு கல்வியின் அவசியத்தையும் பல அறிய கருத்துக்களை வழங்கி அனைத்து மாணவர்களுக்கும் நோட்டு புத்தகங்களை வழங்கினார். சிறப்பம்சமாக இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.

இந்நிகழ்ச்சியில் செந்தில்குமார் கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் திருமதி ஜெயலட்சுமி மணி மனோகரன் மற்றும் ஆசிரியர்களான திரு எபினேசர் திரு மகேஷ் குமார் திரு இளஞ்செழியன் திரு கஜேந்திரன் திரு சீமோன் திரு அருண் பிரியன் திரு திரு ஒளி திரு வசந்த் திரு ஜோஸ் செல்வி மெர்லின் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்சிகளை சிறப்பித்தார்கள். இறுதியாக மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி செந்தில்குமார் கல்வி அறக்கட்டளையின் கணினி கற்பிக்கும் பிரிவு தொடக்க நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. நிகழ்ச்சியின் நிறைவாக செந்தில்குமார் கல்வி அறக்கட்டளை கட்டணமற்ற கல்வி மையத்தின் சார்பாக காவல் ஆய்வாளர் மணிமனோகரன் மற்றும் மனைவி திருமதி ஜெயலட்சுமி மணி மனோகரன் ஆகியோர் காவல் கண்காணிப்பாளர் அ. முத்தமிழ் அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி சிறப்பித்தனர்.

