சொத்து குவிப்பு : பாஸ்போர்ட் அதிகாரியின் சொத்துகளை சி.பி.ஐ. நீதிமன்றம் பறிமுதல் செய்தது..



வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் மூத்த பாஸ்போர்ட் கண்காணிப்பாளரின் தீபக் சந்திரா சொத்துக்களை சிபிஐ நீதிமன்றம் பறிமுதல் செய்துள்ளது.
பாட்னாவை பூர்வீகமாக கொண்ட தீபக் சந்திரா, 2015 ஆம் ஆண்டு உதவி பாஸ்போர்ட் கண்காணிப்பாளராகத் பணியில் சேர்ந்துள்ளார். மேலும் 2021 ஆம் ஆண்டு காஜியாபாத் பாஸ்போர்ட் அலுவலகத்தில் மூத்த பாஸ்போர்ட் கண்காணிப்பாளராக தீபக் சந்திரா பதவி உயர்வு பெற்றுள்ளார்.
காஜியாபாத் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி தீபக் சந்திரா வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளை சேர்த்துள்ளதாக கிடைத்த தகவலின்படி, சோதனை நடத்தப்பட்டு, தீபக் சந்திரா மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 24.03.2025 அன்று சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
குற்றம் சாட்டப்பட்ட தீபக் சந்திரா சோதனை காலத்தில், அதாவது 30.07.2018 முதல் 30.09.2024 வரை, ரூ. 85,06,900/- (146.43%) மதிப்புள்ள வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை ஈட்டியதாகக் கூறப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்ட தீபக் சந்திராவின் குடியிருப்பு வளாகத்தில் நடத்தப்பட்ட சோதனையில், சுமார் 60.00 லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணம், அசையா சொத்துக்களில் முதலீடு செய்ததற்கான விவரங்கள் மற்றும் அதிக அளவிலான பல்வேறு செலவுகளின் விவரங்கள் மீட்கப்பட்டுள்ளது.
மேலும், விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்ட பொது ஊழியர் தீபக் சந்திரா 2 அசையா சொத்துக்களில் முதலீடு செய்துள்ளார், அதாவது காஜியாபாத்தில் உள்ள ராஜ் நகர், விரிவாக்கத்தில் உள்ள 1 குடியிருப்பு பிளாட் மற்றும் கிரேட்டர் நொய்டா மேற்கு, கௌதம்புத் நகரில் உள்ள 1 கடை ஆகியவற்றில், அவரது வருமானத்திற்கு அதிகமாக முதலீடு செய்துள்ளார் என்பதும் தெரியவந்தது.
இந்த வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கில், காஜியாபாத், சிபிஐ நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, 17.09.2025 அன்று, காஜியாபாத் மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் பணியாற்றி வந்த, மூத்த பாஸ்போர்ட் கண்காணிப்பாளர் தீபக் சந்திராவின் 2 சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவு பிறப்பித்தார். சிபிஐயின் விண்ணப்பத்தின் பேரில், மேற்கூறிய சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான இடைக்கால உத்தரவை சி.பி.ஐ நீதிமன்றம் பிறப்பித்துள்ளது


banner

Related posts

டிஜிபி அலுவலக வாசலில் ஏர்போர்ட் மூர்த்தியை செருப்பால் அடித்து தாக்கிய மர்ம நபர்கள் – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

Ambalam News

கடலூர் ரயில் தண்டவாளத்தில் பள்ளி வாகனம் கவிழ்ந்து 6 மாணவர்கள் படுகாயம்..

Ambalam News

கொள்கை எதிரிகள், அரசியல் எதிரிகளை எதிர்த்து – ஜனநாயகப்போர்..! பாஜக – அதிமுகவை மறைமுகமாக குறிப்பிட்டு தவெக விஜய் அறிக்கை.?

Ambalam News

Leave a Comment